நடுராத்திரி 1.30 மணிக்கு புறம் பேசிய அனிதா – ரேகா. நேற்றைய Unseen வீடியோ இதோ.

0
37326
anitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு நாட்களை கடந்து இருக்கிறார்கள் இந்த இரண்டு நாளில் பல்வேறு விஷயங்கள் நடந்தேறியது. முதல் நாள் கொஞ்சம் போராக சென்ற நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்துள்ளது அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் பஞ்சாயத்து கொஞ்சம் சூடு பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியைப் பற்றி செய்தி வாசித்து காண்பித்து இருந்தார் அனிதா சம்பத். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி நான் சிலரிடம் வணக்கம் சொன்னால் கொஞ்சம் தள்ளி தான் இருப்பேன். ஏனென்றால் அவர்கள் பேசும்போது பேச்சில் தெறிக்கும் என்று கூறினார். அப்போது அனிதா எதுவும் சொல்லவில்லை. அதன் பின்னர் ரேகாவிடம் சென்று சுரேஷ் சார் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

- Advertisement -

அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அனிதா சம்பத் சுரேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அனிதா சம்பத், சுரேஷிடம் நீங்கள் செய்தி வாசிப்பாளர்கள் பேசினால் எச்சில் தெறிக்கும் என்று சொன்னது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். இதனை மறுத்த சுரேஷ் சக்ரவர்த்தி ‘நான் செய்தி வாசிப்பாளர் பேசினால் எச்சில் தெறிக்கும் என்று சொல்லவே இல்லை. ஒரு சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் என்றுதான் சொன்னேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அனிதா சம்பத், நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள் வேண்டுமென்றால் குறும்படம் போட்டு காட்டட்டுமா என்று கூறி இருந்தார்.

ஆனால், உண்மையில் சுரேஷ் சக்கரவர்த்தி செய்தி வாசிப்பாளர் பற்றி பேசவேய இல்லை. இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் இரவு 1.30 மணிக்கு ரேகாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அனிதா சம்பத் இங்கே இரண்டாம் நாளே நாமினேஷன் வைத்தது நல்லது தான் இரு சிலரின் உண்மை முகம் தெரிஞ்சது என்று கூறியுள்ளார். மேலும், என்ன சொல்லியுள்ளார் என்பதை வீடியோவில் பாருங்க.

-விளம்பரம்-
Advertisement