விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் நான்காம் தேதி கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தி விவகாரத்தில் அனிதா சம்பத்தின் பெயர் கொஞ்சமாக டேமேஜ் அடைய துவங்கியிருக்கிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட அனிதா – சுரேஷின் எச்சில் பிரசசனையில் கமல் கூட பஞ்சாயத்து செய்து இருந்தார். ஆனால், அப்போதும் அனிதா இந்த பிரச்சனையை விடாதது போல தான் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனிதாவை, சோம் சேகர் வாய் தவறி வனிதா என்று கலாய்த்துவிட்டார். அதற்கும் அனிதா கோபித்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அனிதாவின் அம்மா அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளதாவது. என்னைப் பற்றி என் மகள் சொன்னது அனைத்தும் உண்மைதான் நான் கருப்பாக இருப்பதால் சில புடவைகளை நான் கட்டவே மாட்டேன் இது என்னை இன்னும் கருப்பாக காட்டும் என்று சொல்வேன் ‘உனக்கு எல்லா கலரும் அழகா இருக்கு மம்மி’ என்று சொல்லி என்னை சமாதானப்படுத்துவாள்.
சுரேஷ் அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பேசுகிறார். பார்க்கவும் நல்ல மனிதர் போலத்தான் தெரிகிறார். ஆனால் எச்சில் தெறிக்கும் என்கிற வார்த்தையை தவிர்த்திருக்கலாம். அனிதாவை வணிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.அவங்க இந்த மாதிரி நிலைமையில் இருந்தால் அழ மாட்டாங்க தைரியமாக இருப்பாங்க. இது அழுவுது. சின்னப்பிள்ளை இல்லையா.இப்போதைக்கு நடிகை ரேகா அனிதா பாப்பான்னு இவ மேல அன்பா இருக்கிறது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.