எஸ் பி பிக்காக போட்டியார்களர்கள் செய்துள்ள விஷயம் – இதையெல்லாம் ஏன் டிவில போடல ? Unseen வீடியோ இதோ

0
881
spb
- Advertisement -

மறைந்த பாடகர் எஸ் பி பியின் மறைவிற்கு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை

-விளம்பரம்-

பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் மறைந்த பாடகர் எஸ் பி பிகும் மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மௌன அஞ்சலியை செலுத்தி உள்ளனர். இது குறித்து ஆரி பேசுகையில் எஸ்பிபி மற்றும் வடிவேல் பாலாஜி மறைந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களின் இடங்களுக்கு செல்லவில்லை என்று கூறியிருந்தார். மேலும், ரேகா பேசுகையில், இதை நாம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே செய்து இருக்க வேண்டும் ஆனால் ஒரு சில காரணங்களால் இதை செய்யவில்லை இருப்பினும் தற்போது எஸ்பிபி காக சில நிமிடம் மௌன அஞ்சலி செய்வோம் என்றுகூறி இருந்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்படாத காட்சிகள் ஹாட்ஸ்டாரில் அன்சீன் எனப்படும் பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிவியில் ஒளிபரப்பபடாத சில காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால், எஸ்பிபி போன்ற ஒரு மாபெரும் ஜாம்பவான்களுக்கு போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ள இந்த வீடியோவை ஏன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை என்பதுதான் பலரின் கேள்வியாக எழுந்துள்ளது

-விளம்பரம்-

Advertisement