சுரேஷ் பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா ? புதிய சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்.

0
2517
anitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் பஞ்சாயத்து தான் ஓயாமல் போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுரேஷ் சக்கரவர்த்தியைப் பற்றி செய்தி வாசித்து காண்பித்து இருந்தார் அனிதா சம்பத். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி நான் சிலரிடம் வணக்கம் சொன்னால் கொஞ்சம் தள்ளி தான் இருப்பேன். ஏனென்றால் அவர்கள் பேசும்போது பேச்சில் தெறிக்கும் என்று கூறினார். அப்போது அனிதா எதுவும் சொல்லவில்லை. அதன் பின்னர் ரேகாவிடம் சென்று சுரேஷ் சார் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அனிதா சம்பத் சுரேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அனிதா சம்பத், சுரேஷிடம் நீங்கள் என்னை பாராட்ட வில்லை. நீங்கள் செய்தி வாசிப்பாளர்கள் பேசினால் எச்சில் தெறிக்கும் என்று சொன்னது எனக்கு பிடிக்கவில்லை அது எதோ கீழ் தரமாக இருந்தது என்று கூறினார்.

- Advertisement -

இதனை மறுத்த சுரேஷ் சக்ரவர்த்தி ‘நான் செய்தி வாசிப்பாளர் பேசினால் எச்சில் தெறிக்கும் என்று சொல்லவே இல்லை. ஒரு சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் என்றுதான் சொன்னேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அனிதா சம்பத், நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள் வேண்டுமென்றால் குறும்படம் போட்டு காட்டட்டுமா என்று கூறி இருந்தார்.

அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தியும் தாராளமாக போட்டு காமியுங்கள். நீங்கள் ஒரு சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி விடுவார்கள் என்று கூறியிருந்தார்.ஆனால், உண்மையில் சுரேஷ் சக்ரவத்தி அப்படி சொல்லவே இல்லை. இந்தப் பிரச்சனை துவங்கியதில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதாவிற்கு இடையே அடிக்கடி ஒட்டிக் கொண்டுதான் வருகிறது. ப்ரோமோவில் கூட இவர்களது பஞ்சாயத்தை தான் போட்டுக்காட்டி கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி விட்டாலும் அனிதா விடுவதாக இல்லைசுரேஷ் சக்கரவர்த்தி எது செய்தாலும் அவர் கேமராமாவில் வர பார்க்கிறார் அதனால்தான் அடிக்கடி இப்படி செய்கிறார் என்று அனிதா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி பேசிக்கொண்டு இருக்கும் போது அனிதா சம்பத் நடுவிரலை காட்டியதாக நெட்டிசன்கள் ஊதிய குழு ஒன்றை கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அனிதா சம்பத் அப்படி செய்தாரா இல்லை எதர்ச்சியாக அவர் செய்ததை நெட்டிசன்கள் இப்படி திரித்து பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. ஏற்கனவே வெளியான மூன்றாவது ரோவில் அனிதா சம்பத் இருந்தால், தான் சமையல் டீமில் இருக்க மாட்டேன் என்று சுரேஷ் சக்ரவர்த்தி கூறியிருந்தார். இதனால் மீண்டும் அனிதா சம்பத் புலம்பி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement