ஆமா, பிக் பாஸ்ல ஆடியன்ஸே இல்லையே இது மட்டும் எப்படி ? காரணம் இது தான்.

0
680
rio
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த சில நிமிடத்திற்கு முன்னால் துவங்கியது விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் கோலாகலமாக துவங்கியது ஆனால் பிரச்சினை காரணமாக பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் அனுமதிக்க மறுக்கப்பட்டிருந்தது இருப்பினும் தரை வழியே ஒரு சில துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள் என்று ஒரு சிலரிடம் கமல் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பொதுவாக பிக்பாஸ் என்றாலே முந்தைய சீசன் களுக்கும் அடுத்த சீசனுக்கும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி இருப்பார்கள் அந்த வகையில் இந்த ஆண்டும் பிக்பாஸில் சில புதுமையான விஷயங்களை புகுத்தி இருக்கிறார்கள் கடந்த ஆண்டு இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பிக்பாஸ் ஜெயில் தற்போது கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்பாஸ் ஜெயிலுக்குள் செல்லும் போட்டியாளர்கள் வெளியில் இருக்கும் போட்டியாளர்களுடன் கைகோர்த்து ரொமான்ஸ் எல்லாம் செய்ய முடியாது.

- Advertisement -

அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கழிவறைகள் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் சமையல் அறையில் கூட இரண்டு கேஸ் ஸ்டவ் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீச்சல் குளம் இருந்தாலும் அதில் தண்ணீர் நிரப்பப்படாமல் மூடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் போட்டியாளர்களுக்கு சில கொடுக்கப்பட்டு பின்னர் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் முதல் போட்டியாளராக ரியோ உள்ளே சென்று இருந்தார். மேலும், பிக் பாஸ் அரங்கில் பார்வையாளர்கள் இல்லை என்றாலும் அடிக்கடி கைதட்டலும், விசில் சத்தமும், ரசிகர்களின் கூச்சலும் கேட்டு கொண்டு தான் இருந்தது. Ipl போட்டிகளில் ரசிகார்களுக்கு அனுமதி இல்லை என்பதால் வீரர்களை உற்சாகப்படுத்த ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல்களை போன்று பிக் பாஸிலும் பயன்படுத்தி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement