இப்போதைக்கு இந்த 5 பேர் பிக் பாஸ்ல உறுதி ஆகி இருக்காங்கலாம் – நம்பகரமான தகவல்.

0
12161
biggboss
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-
biggboss

அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள சில போட்டியாளர்களின் லிஸ்ட் லீக் ஆகி உள்ளது. அதில் அமுதவாணன், ஷிவானி, சனம் ஷெட்டி, அமிர்தா ஐயர், ரியோ போன்ற 5 பேர் உறுதி ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க செப்டம்பர் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்று செப்டம்பர் 27 அல்லது அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement