விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த இரண்டு வாரங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லைஅதிலும் ஒருசில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை. இத்தனை எபிசோடுகளில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவின் பிரச்சினை சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் பிரச்சினை என்று இந்த இரண்டு பிரச்சினையை தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லை. அதையும் கடந்த வாரம் கமல் பஞ்சாயத்து செய்து முடித்துவிட்டார். அதே போல எவிக்ஷன் ப்ரீ டாஸ்கின் போது சுரேஷின் தந்திரமான ஆட்டம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.
கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் இல்லை. அதே போல கடந்த வாரம் கமல் வந்தும் கூட ஸ்வராசியமாக எதுவும் நடக்கவில்லை. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் கண்டிப்பாக இந்த இரண்டு நாள் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியின் சில ஹைலைட்டான சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல் ரியோவிடம் குரூபிஸ்லாம் பற்றி பேசியிருக்கிறாராம். அதேபோல வேல்முருகனிடம் சுரேஷ் சக்ரவர்தியன் வேஷ்டி பஞ்சாயத்து குறித்து பேசி உள்ளாராம். மேலும் சுரேஷ் பாராட்டியும் இருக்கிறாராம் கமல். எலிமினேஷன் பொருத்தவரை இன்றைய நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஷிவானி ஆகிய மூவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விட்டதாக என்று அறிவித்து இருக்கிறாராம் கமல்.
கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், அஜித், ரேகா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா ஆகிய 7 பேர் இடம்பெற்றனர். இந்த வாரம் முழுவதும் பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வந்த வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகா தான் கடைசி இடத்தில் இருக்கின்றனர்.எனவே இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் இந்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ரேகா வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக பிக் பாஸ் என்றாலே முதல் எலிமினேஷன் பெண் போட்டியாளர் தான் என்பது கடந்த 3 சீசன்களாக தொன்றுதொட்ட ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற ஒரே ஆண் போட்டியாளரான ஆஜீத் ஏற்கனவே Eviction Free Pass பெற்று தப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.