சென்ற ஆண்டு கவினை போல இந்த ஆண்டும் பிக் பாஸில் ஒரு சரவணன் மீனாட்சி பிரபலம் ?

0
1372
kavin
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. இதுவரை இரண்டு ப்ரோமோ மட்டும் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
biggboss

அதுபோக கடந்த சில தினங்களாக இவர்கள் கலந்து கொள்வார்களா அவர்கள் கலந்து கொள்வார்களா என்று பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக இருக்கும் சில பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டது.இந்த சீசனில் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை மூவரும் மறுத்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ ராஜ் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த கவின் கலந்து கொண்டார். அதே போல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வாடிக்கையான ஒன்று தான். இரண்டாவது சீசனில் பாலாஜி, மூன்றாவது சீசனில் கவின், சாண்டி என்று விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rio-Raj

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரியோ அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்தார். சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய ரியோ. தற்போது எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement