முதல் நாளே ஷிவானியை டார்கட் செய்யும் போட்டியாளர்கள் – நான் பேசவில்லை என்று கூறிய ஷிவானி.

0
1309
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்று (அக்டோபர் 4) துவங்கியது. கொரோனா பிரச்சினை காரணமாக பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும் ஹிந்தி பிக் பாஸ் நிகரான பிரம்மாண்ட செட் மூலம் ரசிகர்களை வியக்க வைத்தது இந்த சீசன். மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

-விளம்பரம்-

இந்த ஆண்டு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் விவரம்

- Advertisement -
  • * ரியோ

* சனம் ஷெட்டி

* ரேகா

-விளம்பரம்-

* பாலா

* அனிதா சம்பத்

* அனிதா சம்பத்

* ஷிவானி

* ஜித்தன் ரமேஷ்

* வேல்முருகன்

* ஆரி

* சோம்

* கேப்ரில்லா

* அறந்தாங்கி நிஷா

* ரம்யா பாண்டியன்

* சம்யுக்தா

* சுரேஷ் சக்ரவர்த்தி

* ஆஜீ

இந்த லிஸ்டில் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றாலும் ஒரு சிலரை தேடிப்பிடித்து கொண்டு வந்துள்ளனர் பிக் பாஸ் குழு. முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களை பற்றிய குணங்கள் வெளியாகவில்லை. அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த எழிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் அறிவித்து இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டை போலவே. இந்த சீசனும் 108 நாட்கள் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி ஜனவரி 16 ஆம் தேதி இந்த சீசன் நிறைவடைய இருக்கிறது .அதே போல இந்த சீசனில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று பல பண்டிகைகளைக் பிக் பாஸ் வீட்டில் தான் கொண்டாடுவார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு நடந்த முதல் ஹார்ட் பிரேக் யாரால் என்பதை கூறுகின்றனர். அதில் சம்யுக்தா, சனம், சுரேஷ் சக்கரவர்த்தி என்று மூவரும் ஷிவானியை குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட் அடைந்துள்ளார்.

Advertisement