1 கோடி கேட்ட பிக் பாஸ் பட நடிகரின் ஹீரோயின் – இ-பாஸ் போட்டு தெறித்து ஓடிய பிக் பாஸ்.

0
1146
biggboss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தெலுங்கில் ஏற்கனவே ப்ரோமோ வெளியான நிலையில் சமீபத்தில் தான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியானது. மேலும், தெலுங்கு பிக் பாஸ் வரும் செப்டம்பர் 6 ஆம் துவங்கும் என்றும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், தமிழில் இன்னும் எப்போது துவங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

அதுபோக கடந்த சில தினங்களாக இவர்கள் கலந்து கொள்வார்களா அவர்கள் கலந்து கொள்வார்களா என்று பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக இருக்கும் சில பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டது.இந்த சீசனில் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சுனைனா, நான் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் என்னுடைய படங்களை யார் முடிப்பது எப்போதும் நான் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது லைவ் சேட்டில் ஈடுபட்டிருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் இதேபோல நடிகையாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த செய்தியை மறுத்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | Dinamalar

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்வதற்க்காக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்தை பிக் பாஸ் குழு அணுகியதாம். ஆனால், அவரோ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 100 நாளைக்கு 1 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளாராம். இதனால் கும்பிடு போட்டுவிட்டு அடுத்த போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம் பிக் பாஸ் குழு.

-விளம்பரம்-
Advertisement