என்ன ஆகணும்னு இந்த 4 மணி பதிவ போட்றீங்க – ஆரியின் கேள்விக்கு ஷிவானி சொன்ன பதில்.

0
1801
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் கடந்த(அக்டோபர் 4) ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான ஒரு போட்டியாளர் தான் ஷிவானி. இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறியப்பட்டவர்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ சமூக வலைதளம் தான். கடந்த சில மாதங்களாகவே சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதிலும் மாலை 4 மணி 5 மணி என்று குறிப்பிட்ட சமயத்தில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனாலேயே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து. இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால், இன்ஸ்டாகிராமில் இவருக்கும் கிடைத்த ஆதரவு பிக் பாஸ் போட்டியாளர்களிடன் கிடைக்கவில்லை.நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானி தான் அதிக ஹார்ட் பிரேக் வாங்கி இருந்தார். இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட்டாக ஒக்கார்ந்து கொண்டு இருக்கும் போது ஆரி அவருக்கு ஆறுதல் கூறினார். நீங்கள் தினமும் நான்கு மணிக்கு ஒரு போஸ்ட் போடுறீங்களே. அதை பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

மேலும் என்ன ஆகவேண்டும் என்பதற்காக அதை எல்லாம் பதிவிடுகிறார்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சிவானி, நிறைய பேர் இங்கே நான் பண்ணுவது கேம் பிளான் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் அப்படி சொல்லும் போது அவர்களுக்கு தான் அந்த கேம் பிளான் இருக்கிறது என்பது போல தான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் எந்த கேம் பிளானுடன் நான் வரவில்லை எனக்கு தோன்றுவதை தான் இங்கே நான் செய்துகொண்டிருக்கிறேன். அனைவருமே பாராட்டுக்காக தான் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று கூறி இருந்தார். நீங்க கேட்ட கேள்விக்கு அதன் பதில் என்று ஷிவானி சொல்வதற்குள் ஆரி குறுக்கிட்டு ஷிவானிக்கு அறிவுரை வழங்கினார்.

-விளம்பரம்-
Advertisement