ஏன்டா யோகி பி பேர சொல்லல. சோம் சேகரை விமர்சித்த ரசிகர். யோகி பி அளித்த பதிலை பாருங்க.

0
16123
som

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க் தொடர்ந்து இதில் சோம் சேகர் பேசுகையில் தனக்கு சிறு வயதிலிருந்தே திக்குவாய் இருந்ததாகவும், இது தன்னுடைய குடும்பத்தார் மற்றும் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியிருந்தார். மேலும் தனக்கு திக்குவாய் என்பதால் நண்பர்களுடன் போனில் கூட பேச தயங்குவேன் என்றும் ஒரு சில படங்களுக்கு டப்பிங் சென்றபோது திக்கும் என்பதால் அந்த பட வாய்ப்புகளை தான் நிராகரிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் லவ் டுடே படத்தில் ( இந்த இடத்தில் அவர் லவ்பேர்ட்ஸ் படத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக லவ்டுடே என்று குறிப்பிட்டிருப்பார் ) ஏ ஆர் ரஹமான் இசையில் இடம்பெற்ற அப்பாச்சி இந்தியன் பாடலில் வரும் ராப் சாங் தான் பள்ளி படிக்கும் போது பயிற்சி செய்து தன்னுடைய திக்குவாய் பிரச்சனையை சரி செய்ய முயற்சித்ததாக கூறி இருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் சிறிது ஆண்டுகள் Rap பாடுவதை நிறுத்திவிட்டதாக கூறி இருந்தார். பின்னர் யோகி பி பாடலின்Rap பாடலை பாடி இருந்தார். அவர் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது போட்டியாளர்கள் அனைவருமே சோம் சேகரை பாராட்டி இறந்தனர். இப்படி ஒரு நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் சோமசேகர் பாடிய இந்த பாடலை பதிவிட்டு ரசிகர் ஒருவர் ‘எல்லாம் ஓகே, என்னமோ அந்த Rapக்கு நீயே சொந்தக்காரன் மாதிரி பாடிட்டே போற. ஏன்டா மலேசிய ரேப்பர் யோகிபி பேர மென்ஷன் பண்ணல’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இந்த பாடலை பாடிய யோகி பி ‘பரவாயில்லை பிரதர், எத்தனையோ rap பாடல்கள் இருக்கும்போது அவர், என்னுடைய 14 வருடத்திற்கு முன்னால் வந்த Rap பாடலை தேர்ந்தெடுத்திருக்கிறார். இது படத்தில் வந்த பாடல் கூட இல்லை. இதனால் எனக்கு சந்தோஷம்தான்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் தற்போது இந்த பதிவு மிகவும் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement