ஷாக்கிங் : பிக் பாஸில் இருந்து வெளியேறினாரா சுரேஷ் ? கொளுத்தி போட்ட பிரபலம்.

0
4667
suresh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறி இருந்தார். அதேபோல கடந்த வாரம்தான் தொகுப்பாளர் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். கடந்த 2 வாரமாக கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது அதற்கு காரணமே பிக் பாஸ் கொடுத்து வரும் டாஸ்க் தான்.

-விளம்பரம்-

இந்த சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்தது. ஆரம்பத்தில் இவருக்கும் அனிதாவிற்கும் இடையே ஒரு பிரச்சினை வெடித்தது. அது ஓரிரு நாட்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை இன்று தான் மிகவும் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.

- Advertisement -

அதில் போட்டியாளர்கள் அரக்கர்களாகவும் மற்றும் அரசர்களாகவும் பிரிந்து விளையாடி வந்தனர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி, ரியோ, சோம் சேகர் பாலாஜி, சம்யுக்தா ஆகியோர் பங்கேற்ற போது சனம் ஷெட்டியை தான் சுரேஷ் சக்ரவர்த்தி டார்கெட் செய்து வெறி ஏற்றினார். மேலும் சம்யுக்தா வெறுப்பேற்றிய போது கூட சனம் ஷெட்டியை பாம்பு என்று குறிப்பிட்டு இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ ஒன்றில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை வாடா போடா என்று கண்டமேனிக்கு வசைபாடியதைப் பார்த்து ரசிகர்கள் அனைவருமேஷாக்காகினார்கள்.

இதற்கு அடுத்து வந்த ப்ரோமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை கன்பெஷன் ரூமுக்கு அழைக்குமாறு கேட்டிருந்தார். அதன் பின்னர் கன்பெஷன் ரூமிற்கு அழைத்து என்ன நடந்தது என்று பிக்பாஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கண்ணீர் மல்க அழுதார் சுரேஷ் சக்கரவர்த்தி. இப்படி ஒரு நிலையில் சிறு சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக சில செய்திகள் வெளியாகி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் மீராமிதுன்ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில், சுரேஷ் சக்ரவர்த்தி ஒருவேளை வெளியேறினாள் அதற்கு டுபாகூர், கொலைகாரி, கிரிமினல் தான் காரணம் என்று ஷாக் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement