பெண் போட்டியாளர் மடியில் படுத்த அபிஷேக் – பாத்தா நீங்களே கான்டாவீங்க.

0
2941
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது நான்கு நாட்களை கடந்துள்ளது. கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த முறை 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலந்து உள்ளார்கள். முதல் இரண்டு நாட்கள் சிரிப்பும், பாசமழை பொழிந்து கொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக புகைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் பவானி ரெட்டி மடியில் அபிஷேக் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து ராஜூ கோர்த்து விட்ட காட்சி குறித்து தற்போது சோசியல் மீடியாவில் காதல் ஜோடியா? என்று பார்வையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களாகவே நெருக்கமாக பழகி வருகின்றனர். பவானி குறித்து அபிஷேக் அவர்கள் நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உங்களுக்கு ப்ரொபோஸ் செய்யலாம். அந்த அளவிற்கு நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். தன்னுடைய வழக்கமான வேலையை அபிஷேக் செய்துள்ளார்.

- Advertisement -

இதனை இதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மடியில் அபிஷேக் படுத்து கொண்டு உள்ளார். பின் அவரது நெற்றியை பவானி பிடித்து விட்டு உள்ளார். இதைப் பார்த்த ராஜி அவர்கள் இமான் அண்ணாச்சியிடம் கோர்த்து விட்டுள்ளார். பின் இமான் அண்ணாச்சி பவானியிடம் அவன் ஏதாவது சொல்லி உன்னை அழ வைத்து விடுவான் உஷாராக இரு என்று கூறியிருக்கிறார். இப்படி நேற்று இவர்களுள் நடந்த காட்சி குறித்து சோசியல் மீடியாவில் பல விதமாக பேசி வருகின்றனர்.

பொதுவாகவே பிக்பாஸ்ஸில் ஒவ்வொரு சீசனிலும் காதலர்கள் உருவாகி வருவது வழக்கம் தான். ஓவியா-ஆரவ், மகத் – யாஷிகா, கவின் – லாஸ்லியா மற்றும் பாலாஜி – ஷிவானி இந்த வரிசையில் இந்த சீசனில் ஒரு காதல் ஜோடி உருவாகுமா? என்று பார்வையாளர்கள் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பவானி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய இருவரும் தங்கள் துணையை பிரிந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Advertisement