‘கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவருக்கு இந்த வெற்றி’ – ஒட்டு மொத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரே பதிவியில் விவரித்த ஜேம்ஸ் வசந்தன்.

0
794
james
- Advertisement -

இந்த சீசனில் கடைசி வாரம் இது. பொதுவாக இந்த நிகழ்ச்சியின் கடைசி சில வாரங்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற விவாதம் பார்வையாளர்களுக்குள் நிகழும். இவர்தான், அவர்தான் என இருவருக்குள் அல்லது மூவருக்குள் அவரவருக்குப் பிடித்தவர்களை இவர்கள் சொல்வது வழக்கம்.ஆனால், இந்த முறை ராஜு என்கிற ஒரு போட்டியாளரை வெற்றியாளராக பெரும்பாலான பார்வையாளர்கள் கடந்த 10 வாரங்களாகவே சொல்லி வருவது புதிய விஷயம். இப்படி ஒன்றைச் சொன்னவுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள், “ஓ! அவ்வளவு தகுதியான ஒரு போட்டியாளரா!” என்று வியப்படைவீர்கள்.இதில் முரண் என்னவென்றால் கொஞ்சம் கூடத் தகுதியில்லாத ஒரே போட்டியாளர் அவர்தான். “பிறகு எப்படி இப்படி பெரும்பாலானவர்கள் தீர்மானிப்பார்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

-விளம்பரம்-

சமூக சிந்தனைகளை ஆராய்கிறவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய இந்த வருடத்தின் அழுத்தமான விஷயம் இது. நடுநிலைவாதிகளும், பாரபட்சமின்றி இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும், இந்தப் போட்டியாளரை விமர்சிக்கிறவர்களும் விடைதெரியாமல் விழிக்கும் சிக்கலான கேள்வியும் இது.அவரின் ஆதரவாளர்களைக் கேட்டால் இந்த ராஜு என்பவர் நல்ல காமெடியன் என்பார்கள். அது உண்மைதான். இந்த நிகழ்ச்சியின் தொடக்க வாரங்களில் 2-3வது வாரங்களில் சில நகைச்சுவையான நிகழ்வுகளைச் செய்தார். பிறரைப் போல நடித்துக்காட்டுவது (impressionist – mimicry, imitating others), நடந்த சாதாரண நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையாக விவரிப்பது போன்றவைகளைச் செய்தபோது எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தது உண்மைதான்.

- Advertisement -

Zombie போலவே பார்ப்பார், அமர்ந்திருப்பார், நடப்பார்.

ஒரு நடிகனாக, இயக்குனராக வேண்டும் என்பது அவரது கனவு. ஏற்கனவே அதில் பாதி தொலைவு வந்துவிட்டார். சீரியல்களில் பிரபலமானவர், நகைச்சுவை அவரது பலம். ஆனால், இந்த Bigg Boss விளையாட்டின் வடிவத்துக்கும் அவருடைய அந்தத் தொழில் திறமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த முதல் இருவாரங்களுக்குப் பிறகு எதுவுமே சொன்னதில்லை, செய்ததில்லை. ஊமையாகத் திரிந்தார். யாருடனும் சிரித்துப் பேச, பழக, உறவு வைத்துக்கொண்டதில்லை. Zombie போலவே பார்ப்பார், அமர்ந்திருப்பார், நடப்பார். அந்த வீட்டிலுள்ள இருவருக்குள் வெட்டிக் குத்திக்கொள்ளும் அளவுக்கு மோதல் நடக்கும், அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.இந்த வீட்டின் பல விதிமுறைகளை மீறினார். வடிகட்டின சோம்பேறி. அந்த வீட்டில் எல்லாரும் பகிர்ந்து செய்யவேண்டிய அன்றாடப் பணிகளை அறவே தட்டிக்கழித்தார். எதுவுமே செய்யாமல் எல்லா நேரமும் உறங்கினார். இவை அந்த வீட்டிலுள்ள எல்லாரும் அவர் முகத்துக்கு முன்பாக தொடர்ச்சியாகச் சொல்லும் குற்றச்சாட்டுகள்.

கிராமப் பின்னணியில் இருந்து வந்திருக்கிற 34-வயது தாமரைச்செல்வி என்கிற நாடக நடிகையின் எளிமையான, இயல்பான ஊர்ப்பின்னணியை தன் சோம்பேறித்தனத்துக்கு வடிகாலாகப் பயன்படுத்தினார் ராஜு. தன்னுடைய எல்லா வேலைகளையும் அந்தப் பெண் மேல் சுமத்தி, அவளைத் தன் unofficial பணிப்பெண்ணாக நியமித்தார். அன்புடன் பிறருக்கு சேவை செய்தே பழக்கப்பட்ட இந்த ஊர்ப்பெண் இந்த சூதைக் கொஞ்சமும் உணராமல் பாசத்துடன், பொறுப்புடன் அவருடைய எல்லா வேலைகளையும் செய்துவந்தார்.இது போதாதென்று, வார இறுதியில் கமல்ஹாசன் அந்தந்த வார நிகழ்வுகளை விசாரிக்கும்போது தன் பலவீனங்களை, விதிமீறல்களை யதார்த்தமாய் சுட்டிக்காட்டுபவர்களை வஞ்சம் தீர்க்கிற நல்ல குணாதிசயத்தையும் கொண்டவர்.

-விளம்பரம்-

பாவனி என்கிற பெண்ணை இன்றுவரை கட்டம் கட்டிப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

சமையல்கட்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை எதையும் செய்யவில்லை என்று முதல் வார இறுதியில் சொன்ன பாவனி என்கிற பெண்ணை இன்றுவரை கட்டம் கட்டிப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.கேமரா உணர்வோடேயே நடமாடுகிற ஒரு விசித்திரப் போட்டியாளரும் கூட. எதைச் செய்தாலும், பேசினாலும் அதற்கு ஏற்றாற்போலவே நடந்துகொள்கிற நல்ல நடிகர். அதனாலேயே மற்றவர்களின் உறவைத் தவிர்த்தார். ஏதாவது பேசினால், எதிர்வாதங்கள் வந்துவிட்டால் அது கேமராவில் பதிந்துவிடும் என்பதால் எல்லாரையும் தவிர்த்து தனிமரமாக நின்றார். ஒருமுறை இவர் noodles செய்து சாப்பிட்டார். அதை சில பெண்களுக்கும் கொஞ்சம் ஊட்டிவிட்டார். தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவரது பணிப்பெண் தாமரைச்செல்வி தனக்கும் அவர் கொடுப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அதை ராஜுவிடம் கேட்கவும் செய்தார்.

Bigg Boss 5' first day highlight is female contestant screaming in fright -  Tamil News - IndiaGlitz.com - Filmy Billboard

இதுதான் அந்த கேமரா நாயகனின் இயல்பு!

நியாயமான அந்தக் கேள்வி மக்களிடம் தன் இமேஜைப் பாதித்துவிடும் என்று புரிந்து அவளை அதட்டி வாயை மூடச்செய்தார். ஊர்ப்பெண்ணை மிரட்டுவது ஒன்றும் கஷ்டமில்லையே. தன்னுடைய அத்தனை வேலைகளையும் செய்கிற அவளுக்கு அந்த உணவைப் பகிரவுமில்லை, கேட்டதற்கு எரிச்சலோடு திட்டு வேறு. இதுதான் அந்த கேமரா நாயகனின் இயல்பு!அவரவர் உண்கிற தட்டு, கிண்ணங்களை அவரவர் கழுவவேண்டும் என்கிற இயல்பான கட்டுப்பாட்டுக்கு கொஞ்சமும் இணங்காத இவரை ஒருமுறை பிரியங்கா எல்லார் முன்பும் வைத்து அமைதியாக அறிவுரை சொல்ல, அது கேமராவில் பதிந்துவிடும் என்பதால் அங்கேயே அதை நிறுத்த ஒரு கெட்டவார்த்தையைப் பயன்படுத்தி பிரியங்கா வாயை மூட முயற்சித்தார்.

ராஜு பிரியங்காவை கெட்டவார்த்தகளால் அசிங்கமாகத் திட்டியிருக்கிற ஒரு காட்சி நிகழ்ந்திருக்கிறது :

ஆனால், பிரியாங்கா அதைத் தெளிவாக விவரித்து நிலைநிறுத்தினார். இந்த நடிகரால் இதையெல்லாம் தாங்கிகொள்ள முடியாது.அன்று இரவு விளக்குகளெல்லாம் அனைக்கப்பட்ட பிறகு, திடீரென பிரியங்கா அடக்கமுடியாத அழுகையுடன் ராஜுவிடம், “என்னை நீ இவ்வளவு அசிங்கமாகத் திட்டிட்டில்ல?” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு நடந்த அந்த வாதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ராஜு பிரியங்காவை கெட்டவார்த்தகளால் அசிங்கமாகத் திட்டியிருக்கிற ஒரு காட்சி நிகழ்ந்திருக்கிறது என்று பார்வையாளர்களாக நாம் விளங்கிக் கொண்டோம். ஆனால் ஏன் அந்தக் காட்சி நேயர்களுக்குக் காட்டப்படவில்லை? இந்த Bigg Boss நிகழ்ச்சியின் பலமே இந்த வாதங்களும், சண்டைகளும்தான்.

பொது நிகழ்ச்சியில் திட்டும் பண்புமிக்க ராஜு என்கிற போட்டியாளர்

அது நடக்குமாறு பார்த்துக்கொள்கிற BB குழுவினர் ஏன் இப்படி தானாய் கிடைத்த இந்த நிகழ்வை ஒளிபரப்பவில்லை என்று யோசித்தோம்.இதற்கு முன்பு, சில வாதங்களில் கோபத்தின் உச்சத்தில் சிலர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதை அப்படியே காண்பித்தார்கள், சில இடங்களில் beep செய்தும் காட்டியிருக்கிறார்கள். அவைகளைக் காட்டிய BB குழு ஏன் இதைக் காட்டவில்லை என்று ஆராய்ந்தபோது, ஓரிரு வார்த்தைகள் வந்திருந்தால் beep சேய்துவிடலாம். அந்தக் காட்சி முழுவதும் கெட்ட வார்த்தைகளாக இருந்தால் அதைக்காட்ட முடியாது. அது இந்த நிகழ்ச்சிக்கே பாதகமாகி விடலாம், சட்ட பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம் என்று தவிர்த்துவிட்டார்கள் என்பதை விளங்கிக்கொண்டோம்.அந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக அசிங்கமான அருவருப்பான வார்த்தைகளால் ஒரு பெண்னை பலகோடி மக்கள் பார்க்கிற ஒரு பொது நிகழ்ச்சியில் திட்டும் பண்புமிக்க ராஜு என்கிற போட்டியாளர் Bigg Boss Season 5 வெற்றியாளர் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement