அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி கொண்டு வருகின்றது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தெரிந்த முகத்தை விடை தெரியாத முகம் தான் அதிகம் இருக்கிறார்கள். மேலும், வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் சவால்கள், போட்டிகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
Freeze Task :
அதிலும் இந்த முறை யார் டைட்டில் வின்னர்? என்று யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வரும் டாஸ்க். இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் விட்டுக்குள் குடும்பத்தினர் வருகை தர உள்ளனர் என்பதை இன்றைக்கான முதல் புரோமோவில் அனைவரும் பார்த்து இருப்போம்.
சிபி மனைவி :
முதல் ப்ரோமோவில் அக்ஷராவின் சகோதரர் மற்றும் அம்மா வந்து இருந்தார்கள். இதை பார்த்து அனைவரும் கண் கலங்கினார்கள். இதனைத்தொடர்ந்து இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் சிபியின் மனைவி வந்திருக்கிறார். அவருடைய பெயர் Shloka. அவர் உள்ளே வந்ததும் சிபி அவரை கட்டிப்பிடித்து வரவேற்கிறார். பின் பிரியங்கா சிபியிடம் உன் மனைவியை கட்டி பிடித்து என்று சொல்கிறார். உடனே சிபி அவள் வந்ததும் நான் கட்டி பிடித்து விட்டேன் என்று சொல்கிறார்.
கட்டிபிடிக்க சொன்ன பிரியங்கா :
இன்னொருவாட்டி எங்களுக்காக எங்கள் கண் முன்னாடி கட்டிப்பிடி நாங்கள் பார்க்க வேண்டுமென்று பிரியங்கா கூறியதால் மீண்டும் தனது மனைவியை சிபி கட்டிப் பிடிக்கிறார். இந்த ப்ரோமோ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மேலும், பிக்பாஸ் வீட்டில் அனைவரும் சந்தோசத்தில் மூழ்கி இருக்கிறார்கள். அதே போல சிபி மணைவி மட்டுமல்லாது சிபியின் தந்தையும் சென்று இருக்கிறாராம். அடுத்து எந்த குடும்பத்தினர் வரப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிபி பற்றிய சில தகவல்கள் :
தற்போது சிபியின் இந்த ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிபி பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் மாஸ்டர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தில் சிபி நடிகர் விஜயின் மாணவராக நடித்து இருந்தார்.
தற்போது சிபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் சிபி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் வீட்டில் மிகத் திறமையாக தனக்கு கொடுத்த சவால்களை சரியாக விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை சிபி தட்டி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.