சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். மேலும், ஆரம்பத்திலேயே இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு ஓரிரு நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.
பிக் பாஸ் சீசன் 5 பைனல்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டிகள், சவால்கள் நடைபெற்று வந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இந்த முறை முக தெரியாத நபர்கள் பலபேர் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.
அபிநய்:
ஒருவாரத்திற்கு- 2.75 லட்சம்
மொத்தம் இருந்தது -77 நாட்கள் = 11 வாரம்
மொத்தம் சம்பளம் = 11*2.75 = 30.25 லட்சம்.
மதுமிதா:
ஒரு வாரத்திற்கு – 2.5 லட்சம்
மொத்தம் இருந்தது- 42 நாட்கள் = 6 வாரம்
மொத்தம் சம்பளம் = 6* 2.5 = 15 லட்சம்.
பிரியங்கா:
ஒரு வாரத்திற்கு – 2 லட்சம்
மொத்தம் இருந்தது- 105 நாட்கள் = 15 வாரம்
மொத்தம் சம்பளம் = 15* 2 = 30 லட்சம்.
நாடியா சாங்:
ஒரு வாரத்திற்கு – 2 லட்சம்
மொத்தம் இருந்தது- 14 நாட்கள் = 2 வாரம்
மொத்தம் சம்பளம் = 2* 2= 4 லட்சம்.
இமான் அண்ணாச்சி:
ஒரு வாரத்திற்கு – 1.75 லட்சம்
மொத்தம் இருந்தது- 70 நாட்கள் = 10 வாரம்
மொத்தம் சம்பளம் = 10* 1.75= 17.5 லட்சம்.
அபிஷேக் ராஜா:
ஒருவாரத்திற்கு- 1.75 லட்சம்
மொத்தம் இருந்தது- 37 நாட்கள் = 5 வாரம்
மொத்தம் சம்பளம் = 5* 1.75= 8.75 லட்சம்.
நமிதா மாரிமுத்து:
ஒருவாரத்திற்கு- 1.75 லட்சம்
மொத்தம் இருந்தது- 6 நாட்கள்
மொத்தம் சம்பளம் = 1.50 லட்சம்.
ராஜூ ஜெயமோகன்:
ஒரு வாரத்திற்கு- 1.5 லட்சம்
மொத்தம் இருந்தது- 105 நாட்கள் = 15 வாரம்
மொத்தம் சம்பளம் = 15* 1.5= 22. 5 லட்சம்.
சின்ன பொண்ணு:
ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம்
மொத்தம் இருந்தது- 28 நாட்கள் = 4 வாரம்
மொத்தம் சம்பளம் = 4* 1.5= 6 லட்சம்.
பவானி ரெட்டி:
ஒரு வாரத்திற்கு – 1.25 லட்சம்
மொத்தம் இருந்தது- 105 நாட்கள் = 15 வாரம்
மொத்தம் சம்பளம் = 15* 1.25= 18.75லட்சம்.
வருண்:
ஒரு வாரத்திற்கு – 1.25 லட்சம்
மொத்தம் இருந்தது- 84 நாட்கள் = 12 வாரம்
மொத்தம் சம்பளம் = 12* 1.25= 15 லட்சம்.
அக்ஷரா ரெட்டி:
ஒரு வாரத்திற்கு – 1 லட்சம்
மொத்தம் இருந்தது- 84 நாட்கள் = 12 வாரம்
மொத்தம் சம்பளம் = 12* 1= 12 லட்சம்.
இசைவாணி
ஒரு வாரத்திற்கு – 1 லட்சம்
மொத்தம் இருந்தது- 49 நாட்கள் = 7 வாரம்
மொத்தம் சம்பளம் = 7* 1= 7 லட்சம்.
சுருதி:
ஒரு வாரத்திற்கு – 70 ஆயிரம்
மொத்தம் இருந்தது- 35 நாட்கள் = 5 வாரம்
மொத்தம் சம்பளம் = 5* 70000= 350000 லட்சம்.
தாமரைச்செல்வி:
ஒரு வாரத்திற்கு -70000
மொத்தம் இருந்தது- 98நாட்கள் = 14 வாரம்
மொத்தம் சம்பளம் = 14* 70000= 980000 லட்சம்.
சிபி:
ஒரு வாரத்திற்கு – 70000
மொத்தம் இருந்தது- 95 நாட்கள் = 14 வாரம்
மொத்தம் சம்பளம் = 14 * 70000= 980000லட்சம் + 12 லட்சம்= 2180000 லட்சம்.
அமீர்:
ஒரு வாரத்திற்கு – 70000
மொத்தம் இருந்தது- 54 நாட்கள் = 8 வாரம்
மொத்தம் சம்பளம் = 8* 70000= 560000லட்சம்.
சஞ்சீவ்:
ஒரு வாரத்திற்கு – 2 லட்சம்
மொத்தம் இருந்தது- 38 நாட்கள் = 6 வாரம்
மொத்தம் சம்பளம் = 6* 2= 12 லட்சம்.
நிரூப்:
ஒரு வாரத்திற்கு – 70000
மொத்தம் இருந்தது- 105 நாட்கள் = 15 வாரம்
மொத்தம் சம்பளம் = 15* 70000= 1050000 லட்சம்.
ஐக்கி பெர்ரி:
ஒரு வாரத்திற்கு – 70000
மொத்தம் இருந்தது- 56 நாட்கள் = 8 வாரம்
மொத்தம் சம்பளம் = 8* 70000= 560000 லட்சம்.