மீண்டும் இவர் காப்பாற்றப்பட்டுவிட்டாரா ? இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்.

0
444
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 69 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அமீர் மற்றும் சஞ்சீவ் என்று இன்று வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் மொத்தம் 20 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். இந்த சீசனில் சில உடல் நல பிரச்சனை காரணத்தால் முதல் போட்டியாளராக நமீதா மாரிமுத்து வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் எலிமினேட் போட்டியாளராக வெளியேறினார்.

-விளம்பரம்-

அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி ஆகியோர் வெளியேறுகிறார்கள். இன்னும் 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் 7 பேர் நாமினேட் ஆனார்கள். இதில் அபிநய், அமீர், அக்ஷரா, அண்ணாச்சி, சிபி, நிரூப் தாமரை ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.

இதையும் பாருங்க : இன்று இந்திய அளவில் ஃபேமஸ் ஆக இருக்கும் பிரபுதேவா தன்னுடைய முதல் பாடலுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

இந்த வாரம் அபிநய் தான் நிச்சயம் வெளியே வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தார்கள். அதே போல பல்வேறு தனியார் வலைதளங்களில் நடத்தப்பட்டு வந்த வாக்கெடுப்பில் கூட அபிநய் தான் வாக்கெடுப்பில் கடைசியில் இடத்தில் இருந்து வந்தார். அதனால் அபிநய் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் அண்ணாச்சி வெளியேறி இருப்பததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதேபோல அண்ணாச்சி ஒரு கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர் என்பதால் அவரை தக்கவைத்துக் கொள்ள ரகசிய அறைக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் கடந்த சீசனில் ரகசிய அறை பயன்படுத்தப்படவில்லை எனவே இந்த சீசனில் ஆவது ரகசிய அறை பயன்படுத்தப்படும் இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஒருவேளை அப்படி பயன்படுத்தப்படாமல் அண்ணாச்சி வெளியேறினால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது

-விளம்பரம்-
Advertisement