விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இடையே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 9 பேர் வெளியே இருக்கும் நிலையில் 12 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள். மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். அதேபோல இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அனைவரும் நாமினேஷன் :
இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருப்பதால் நமினேஷனில் இருந்து தப்பிக்க இந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுவந்தது . இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார். இதன் மூலம் இவர்கள் இருவரும் இந்த வார நமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர்.
நாமிநேஷன் free டாஸ்க் :
இப்படி ஒரு நிலையில் மீதம் இருக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க டாஸ்கில் உயிரைக்கொடுத்து போராடிவந்தனர். இதனால் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் வெடித்துக் கொண்டுவந்தது. அதிலும் சில டாஸ்கில் நிகழ்ச்சியில் ராஜு மற்றும் அக்ஷராவிற்கு இடையே பல முறை சண்டை வெடித்தது. இதில் பஞ்சாயத்து செய்ய சென்ற பிரியங்காவின் தலையும் உருண்டது.
நேற்றய நிகழ்ச்சியில் சஞ்சீவ், ராஜு, அபிநய், பிரியங்கா, அமீர், பாவனி, வருண், அக்ஷரா இறுதி டாஸ்கில் பங்கேற்றனர். இதில் சஞ்சீவ், அமீர் டாஸ்கில் வென்று நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். இதனால் ராஜு, அக்ஷரா, பிரியங்கா, வருண், பாவனி, அபிநய் ஆகிய 6 பேர் நாமிநேஷனில் தொடர்வதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவர் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த வாரம் வெளியேற நபர் :
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போல இந்த வாரம் அபிநய் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்தே வாரமே அபிநய் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், அண்ணாச்சி வெளியேறி இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
டபுள் எவிக்ஷன் :
அதே போல இந்த வாரம் நடத்தப்பட்ட நாமினேஷன் Free டாஸ்கில் அபிநய் வெற்றி பெற்று எஸ்கேப் ஆகிவிடுவாரோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த டாஸ்கில் தோல்வியடைந்து நாமினேஷனில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த வாரம் இரண்டு எலிமிநேஷன் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு எலிமினேஷன் மட்டுமே நடைபெற்று இருக்கிறதாம்.