பிக் பாஸ்ல கொடுத்த காசும், பிக் பாஸில் கலந்துகொள்ள செலவு செய்த காசு எல்லாம் – நாதியா குடுமபத்தினர் புலம்பல்.

0
13846
nadia
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருந்தார்கள். அதிலும் தமிழ் பிக்பாஸில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில நாட்களிலேயே அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்குமே தெரிந்தது. மேலும், இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மலேசியா தமிழர் நதியா சாந்க். இவர் மலேசியாவிலேயே சீரியல், மாடலிங், விளம்பரம் என பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

மலேசியாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து முகேன் கலந்திருந்தார். முகென் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் டைட்டில் வின்னர். அதேபோல் இந்த முறையும் மலேசியாவில் இருந்து கலந்துகொண்ட நதியா சாங்க் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார் என்று எதிரிபார்க்கப்பட்டது. ஆனால், துருதிஷ்டவசமாக முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டு நதியா சாங்க் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியது எல்லோருக்குமே பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இது குறித்து நதியா சாங்க் குடும்பத்தினர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, நீங்கள் நிகழ்ச்சியில் காணாமல் போய்விட்டீர்கள் அதனால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டீர்கள் என்று கமல் சார் சொல்லி இருந்தார். நதியா சாங்கை அனைவரும் கவனித்ததானால் தான் அவரை காணாமல் போய் விட்டார் என்று கூறினார்கள். அவர் இவ்வளவு சீக்கிரமாக வெளியே வருவார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாகவே அவர் எந்த ஒரு விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிட மாட்டார். நான் நடிகை நானும் கேமரா முன்னாடி ஓவராக நடிப்பேன் என்று எந்த பந்தாவும் காட்டமாட்டார். இந்த வீட்டுக்குள்ள அவங்களுக்கு வந்த வேலையை பார்த்துட்டு இருந்தாங்க. அப்படி இருக்கிறது தான் தப்பு என்று இப்போ புரிகிறது.

எங்களுக்கு என்ன ஆதங்கம் என்றால் பிக்பாஸில் கலந்து கொண்டு அதில் வரும் பணத்தை விட அதற்காக நாங்கள் செய்த செலவு பணம் தான் அதிகம். இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அவங்களுக்கு நிறைய ரசிகர்கள் மலேசியாவில் உள்ளார்கள். ஆனால், இந்த ஓட்டு போடும் முறையில் தான் பிரச்சனை. இதே மலேசியா மக்கள் ஓட்டு போட்டு இருந்தால் அவர் எலிமினேட் ஆகி இருந்து இருக்கமாட்டார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டு போட பல பிரச்சினைகள் உள்ளது. நாங்களே ஒட்டு போட பயங்கர கஷ்டப்பட்டோம். இந்தப் பிரச்சனையை சேனல் சரி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement