கமலுக்கு பதில் யார் Host – இவங்க ரெண்டு பேர் பேரு தான் அடிபடுது. யார் வந்தா நல்லா இருக்கும்.

0
264
kamal
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள தகவல் வெளியாகி இருப்பதால் பிக்பாஸ் நிலைமை என்ன? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிக் பாஸ் நாயகன் கமலஹாசன் அவர்கள் தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

-விளம்பரம்-
Kamal, Sarathkumar rub shoulders in bid to rattle Dravidian parties

பின் கமலுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியாகி இருக்கிறது. இதனிடையே 50 வது எபிசோடில் கலந்துகொள்வதற்காக கமலஹாசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்த எபிசோடின் படபிடிப்பு ஒரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் கமலஹாசனுடன் நிகழ்ச்சியில் இருந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

கமலஹாசனுடன் அருகிலிருந்த இசைவாணி, சூட்டிங் பார்க்க வந்த பார்வையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்னா, இவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் கமல் வரவில்லை என்றால் அவருக்கு பதில் வேறு யாராவது கலந்துகொள்வார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து கமல் பதிவிட்ட பதிவில் நடிகர் சரத் குமார் ‘விரைவில் குடமடைய என் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் தான் அடுத்த தொகுப்பாளரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல சுருதி ஹாசன் பெயரும் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸின் ஒரு சீசனில் தொகுப்பாளராக இருந்த நாகர்ஜுனா படத்தின் ஷூட்டிங் சென்ற போது அவருக்கு பதிலாக அவரின் அப்போதைய மருமகள் சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement