விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் மீதம் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் பாவணி ரெட்டி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடர் மூலம் பிரபலமான இவர் கடந்த சில காலமாகவே சின்னத்திரை பக்கம் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸில் இவர் கலந்து கொண்ட ஆரம்பத்தில் இவருக்கு செம ரசிகர்கள் இருந்தார்கள். இவர் பிக்பாஸில் செல்லும் முன்னரே இவருக்கென்று சமூகவலைதளத்தில் பல்வேறு ஆர்மிக்கல் கூட துவங்கப்பட்டது. ஆனால், இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்து வந்த போது தன்னுடைய முதல் கணவர் இறப்பு குறித்து பேசி இருந்தார். ஆனால், இவருக்கு இரண்டாம் திருமணம் நின்று போனது பற்றி இவர் அதில் சொல்லவே இல்லை.
இதையும் பாருங்க :தனி ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா – நேரா சமந்தா எந்த ஆசிரமத்திற்கு போய் இருக்கார் பாருங்க.
இருப்பினும் அண்ணாச்சியிடம் இரண்டாம் திருமணம் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணத்தை தனியாக கூறி இருந்தார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபினயிடம் மிகவும் நெருக்கமாக பேசியிருந்தார். அதை நம்பி அபிநயும் பாவனியிடம் வருண் பற்றி பேசி இருந்தார். அப்போது அனைத்தையும் கேட்டுவிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில்அபிநய் தன்னிடம் நம்பி சொன்னதை அப்படியே அனைவர் முன்பும் போட்டு உடைத்துவிட்டார் பாவனி.
அப்போது பேசிய பாவணி எனக்கு பின்னால் சென்று பேசுவது எல்லாம் தெரியாது என்று கூறியிருந்தார். ஆனால் இதேபாவனி தான் அக்ஷரா பற்றி பலமுறை பின்னால் பேசி இருக்கிறார். அவர் மட்டும் கிடையாது பல போட்டியாளர்கள் பற்றி மற்றவர்களிடம் தொடர்ந்து புரணி பேசிக் கொண்டுதான் இருக்கிறார் பாவணி. அதற்கு சான்றாக இவருக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.