நல்லவங்க வேஷம் போடாதீங்க ‘ – துவங்கியது இந்த சீஸனின் முதல் நாமினேஷன். உங்கள் கணிப்பு யார் யார் ?

0
1035
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக இருந்து வந்தனர் அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது ஆனால் சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

-விளம்பரம்-

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு முதல் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அவரது பேச்சு ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக ஒலித்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் சில தவிர்க்க முடியாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

மேலும், நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததாக கூறப்பட்டது. அவரை பிக் பாஸ் குழு எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனும் அளிக்காததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூட கூறப்பட்டது.

அதே போல அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் அறிவித்திருக்கிறார் பிக்பாஸ். மேலும், எல்லாரும் நல்லவங்க வேஷம் போட வேண்டாம் என்றும் போட்டியாளர்களை கலாய்த்திருக்கிறார் பிக் பாஸ்

-விளம்பரம்-
Advertisement