பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்ற ராஜு – கோப்பையுடன் அவர் கொடுத்த போஸ் இதோ. வைரல் புகைப்படம்.

0
266
raju
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பல விறுவிறுப்புடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்கள்.

- Advertisement -

யார் வெற்றியாளர் :

பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்று முடிவாகிவிடும். மேலும், இந்த வாரம் பதிவு செய்யப்படும் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் டைட்டில் வின்னர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் இதுவரை வந்த தகவலின் படி ராஜு தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

Image

பெருவாரியான வாக்கை பெற்ற ராஜு :

இவரையடுத்து பிரியங்கா உள்ளார். அதுமட்டுமில்லாமல் ராஜுவுக்கும், பிரியாவுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக இருப்பதால் ராஜு தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட சோஷியல் மீடியாவில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராஜு பிக் பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

-விளம்பரம்-

வெளியேறிய நிரூப் :

மேலும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்து இருக்கிறார். ஆனால், யார் மூன்றாவது இடத்தை பிடிக்கப்போகிறார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியே, மேலும், பிக் பாஸ் இறுதி போட்டிக்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி விட்டது. இப்படி ஒரு நிலையில் இறுதி வாரத்தில் நிரூப் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் பிரியங்கா, அமீர், பாவணி, ராஜு என்று 4 விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே இறுதி போட்டியில் இருக்கின்றனர்.

முதல் மூன்று இடத்தில் விஜய் டிவி பிரபலங்கள் :

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிரூப்பின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிவிட்டது. அதே போல அமீர் – பாவணி இருவரில் நிச்சயம் பாவனிக்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாவனிக்கு தான் மூன்றாம் இடம் கிடைத்து இருக்கிறது. இந்த சீசனில் முதல் 3 இடத்தை பிடித்தவர்கள் மூவரும் விஜய் டிவி ப்ராடக்ட் தான்.

Advertisement