நான் பணப் பெட்டியை எடுத்தாலும் எடுத்துடுவேன்’ – Brain Wash பண்ணும் போட்டியாளர். லீக்கான வீடியோ இதோ.

0
500
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் சரத்குமார் உள்ளே வந்து இருந்தார். கடந்த சீசனில் 5 லட்ச ரூபாபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கேபி. மேலும், இவரது முடிவை பலரும் பாராட்டினர். மேலும் அதற்க்கு முந்தய சீசனில் கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்க் :

அந்த சீஸனின் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.கடந்த இரண்டு சீசனில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் 3 லட்சம் தற்போது வரை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்டியை யாரும் எடுத்து செல்லவில்லை என்றால் அடுத்த தொகை மாறும். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் யார் இந்த பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

https://www.youtube.com/watch?v=Tg35jnARvCk

யார் எடுத்து செல்ல மாட்டார்கள் :

அதே போல இந்த சீசனில் டாப் இரண்டு இடத்தில் இருக்கும் ராஜு, பிரியங்கா கண்டிப்பாக இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல நீரூபும் நான் பணத்தை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி இருந்தார். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் பேசிய சிபி, கண்டிப்பாக தான் பைனல் வரை செல்வேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

யார் எடுத்துச்செல்ல அதிக வாய்ப்பு :

எனவே, மீதம் இருக்கும் பாவனி, அமீர், தாமரை ஆகிய மூவரில் யாராவது தான் இந்த பணப்பெட்டியை எடுத்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதில் அமீர், ஏற்கனவே இறுதி போட்டிக்கு சென்றுவிட்டார் என்பதால் அவர் எடுப்பது சந்தேகமே அதனால் பாவனி அல்லது தாமரை இருவரில் யாரவது தான் இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வார்கள். இதில் கண்டிப்பாக தாமரை எடுத்து செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Brain Wash செய்யும் நிரூப் :

இப்படி ஒரு நிலையில் இன்றைய 3 வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பேசி இருக்கும் நிரூப், நான் எடுத்தாலும் எடுத்துவிடுவேன் இது வரைக்கும் வந்ததே வெற்றி தான். இந்த 7 பேரில் ஜெயிக்க போவது யாராவது ஒருத்தர் தானே என்று தாமரையிடம் கூறுகிறார் நிரூப். உண்மையில் பணத்தை எடுத்தோக்கொண்டு செல்வாரா இல்லை மற்றவர்களை குழப்ப இப்படி சொல்கிறாரா என்பது தெரியவில்லை.

Advertisement