இரண்டாம் வாரத்தில் நாமினேட் ஆன 9 பேர் – யார் ? யாரை நாமினேட் செய்தார்கள். முழு லிஸ்ட் இதோ.

0
1243
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 2 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவணி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இந்த வாரம் யார் ? யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை பாப்போம்.

-விளம்பரம்-

அக்ஷரா – அபிஷேக், பாவனி
நிரூப் – அக்ஷரா, தாமரை
அண்ணாச்சி – இசைவாணி, பாவனி
பாவனி – அக்ஷரா, அபிஷேக்
வருண் – நிரூப் , அபிஷேக்
பிரியங்கா – சின்ன பொண்ணு, சுருதி
அபிஷேக் – அக்ஷரா, சின்ன பொண்ணு
ஐக்கி – பிரியங்கா, அபிஷேக்
தாமரை செல்வி – பாவனி, அபிநய்
இசைவாணி – அபிநய் , பிரியங்கா
சுருதி – அண்ணாச்சி, ஐக்கி
சின்ன பொண்ணு – அபிஷேக், பாவனி
ராஜு – சின்ன பொண்ணு, பாவனி
மதுமிதா – தாமரை, ஐக்கி
அபிநய் – இசைவாணி, தாமரை
சிபி – பிரியங்கா, அபிஷேக்

- Advertisement -

இதில் அபிஷேக் 6, பாவனி 5, அக்ஷரா 3, இசைவாணி 3, பிரியங்கா 3, தாமரை செல்வி 3, இசைவாணி 2, அபிநய் 2 என்ற விதித்தில் நாமினேஷனில் வாக்குகளை வாங்கி இருக்கின்றனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதில் அபிஷேக், சின்ன பொண்ணு, தாமரை ஆகிய 3 பேர்களில் யாரவது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அபிஷேக் தான் வெளியேற வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. அபிஷேக் கடந்த வாரமே வெளியேறி இருக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். பொதுவாக முதல் வாரத்தில் வயதானவர்களை தான் எலிமினேட் செய்வார்கள். அதனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் சின்ன பொண்ணு தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முதல் வாரத்தில் நாடியா வெளிறியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என்னதான் நாடியா பிக் பாஸ் வீட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் அவரை அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement