பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.
நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இவரை தொடர்ந்து நேற்று நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர். இதில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டனர்.
இறுதி கட்டத்தில் சிபி – அமீர் :
நேற்று நடைபெற்ற இறுதி டாஸ்கில் சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவர் மட்டும் விளையாடினர். இதில் சஞ்சீவ் வெளியேற சிபி மற்றும் அமீர் இறுதி கட்டத்திற்கு முன்னேறினர். இதில் வெற்றி பெரும் ஒருவர் Ticket To Finale வாய்ப்பை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் என்று இருந்த நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
Ticket To Finale டாஸ்கை வென்றது யார் :
இன்று நடைபெற்ற இறுதி Ticket To Finale டாஸ்கில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு சென்று இருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல பிக் பாஸ் வரலாற்றிலேயே Ticket To Finale டாஸ்கை வென்ற முதல் வைல்டு கார்ட் போட்டியாளர் அமீர் தான்.
Physical டாஸ்க்குகள் எங்கே :
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது Ticket To Finale தான். இந்த டாஸ்கில் பெரும்பாலும் உடலை வருத்தி விளையாடும் வகையில் Physical டாஸ்க்கும் மூளைக்கு வேலை கொடுக்கும் டாஸ்க்கும் தான் மக்கள் எதிர்பார்பார்கள். அதிலும் கடந்த சீசன்களில் இறுதி கட்டம் வரை அணைத்து போட்டியாளர்களும் பங்குபெற்றனர்.
போன சீசன் டாஸ்க்குகள் நினைவிருக்கா :
மேலும், அவர்களுக்கு ஓவ்வொரு டாஸ்கிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இறுதியில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கே Ticket To Finale டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்குகள் வெறும் வாயை பயன்படுத்தியே நடத்தப்பட்டது. இதனால் இந்த Ticket To Finale டாஸ்க் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது என்பதே உண்மை.