போட்டியாளர்கள் மெத்தையில் செய்ததை வெறும் தரையில் செய்து அசத்தியுள்ள சின்ன பொண்ணு – Unseen வீடியோவை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்.

0
568
chinnaponnu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் சின்ன பொண்ணு செய்த செயலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நான்காவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இதுவரை நமிதா மாரிமுத்து நாடியா அபிஷேக் என்று மூவர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்தவார நாமினேஷனில் இந்த வாரம் அபினை, சின்ன பொண்ணு, வருண், பிரியங்கா, ஸ்ருதி, அக்ஷரா, பாவனி, இமான், இசை வாணி என்று 9 பேர் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பல தனியார் வலைதளங்களில் நடத்தப்பட்ட ஓட்டிங்கில் சின்னபொண்ணு, அபிநய், இசை ஆகிய மூவருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகின. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : கோவில் வாசலில் இருந்த கிழவன் கிழவியன் அன்பை பார்த்து கலங்கி தன் மகனுக்கு போன் செய்த ரகுவரன் – தனிமையின் வலி.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் வெளியேறுவார்கள். ஆனால், இந்த சீசனில் தான் அப்படி நடக்கவில்லை. முதல் வாரத்தில் நாடியாவும், இரண்டாம் வாரத்தில் அபிஷேக்க்கும் வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் முதல் வாரமே வெளியேற்றப்பட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சின்ன பொண்ணு முன்றாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் சின்ன பொண்ணுவின் Unseen வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய்யுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் Plank டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில் சின்ன பொண்ணு கலந்து கொள்ளாமல் நடுவராக தா இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க் முடிந்த பின்னர் சின்ன பொண்ணுவே நானும் செய்து பார்க்கிறேன் என்று கூறி வெறும் தரையில் 1 நிமிடம் plank செய்து அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த காட்சிகள் டிவியில் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஏன் சின்னப்பொண்ணுவின் காட்சிகள் எல்லாம் வெறும் Unssenல் மட்டுமே இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் அவர் வெறும் செட் பிராப்பர்ட்டி போல அமர்ந்து கொண்டிருப்பது போலத்தான் காட்டப்படுகிறார். ஆனால், Unseen வீடியோவில் அவர் ஒரு நிமிடம் பிளாங்க் செய்திருக்கிறார்.

ஆனால் ஏன் சின்னப்பொண்ணு பிக்பாஸ் வீட்டில் எதுவுமே செய்யாது இதுபோல காட்சிப் படுத்தப் படுகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல சின்னபொண்ணு இந்த விளையாட்டில் நானும் கலந்து கொள்கிறேன் என்று தான் கூறி இருக்கிறார். ஆனால், அவரின் பேச்சை யாரும் எடுத்துக் கொள்ளாமல் அவரை நடுவராக அமர்ந்திருக்கிறார்கள். இருப்பினும் இளம் போட்டியாளர்களுக்கு இணையாக சின்னப்பொண்ணு Plank செய்துள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் மெத்தையில் செய்த பிளாங்கை வெறும் தரையில் மற்ற போட்டியாளர்ளை விட மிகவும் சரியாக செய்து அசத்தி இருக்கிறார் சின்ன பொண்ணு. தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து சின்ன பொண்ணுவை பாராட்டி வருவதோடு, இதோ போன்ற சுவாரசியமான வீடியோக்களை எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement