50 லட்சம் இல்லை – பிக் பாஸ் பட்டத்துடன் ராஜுவிற்கு கிடைத்த மொத்த பணம் எவ்ளோ தெரியுமா ?

0
1602
raju
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Image

ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களம் இறங்கி இருந்தார்கள். அதிலும் இந்த முறை ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்து வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு ஓரிரு நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் 5 இறுதி போட்டி :

இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டிகள், சவால்கள் உடன் நடைபெற்று வந்தது. வழக்கம் போல பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இந்த முறை முக தெரியாத நபர்கள் பலபேர் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை வித்தியாசமான போட்டிகள் சவால்கள் என்று கொடுக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்றது.

Image

பட்டத்தை வென்ற ராஜு :

பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட நாள். ஆனால், நேற்றே இன்றைக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்தது. இதில் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று ராஜூ டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். மேலும், டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதை தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் அடிப்படையில் 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

105 நாளுக்கான சம்பளம் :

இதன் அடிப்படையில் பரிசு தொகை 50 லட்சம் மற்றும் சம்பளம் 21 லட்சம். மொத்தம் 71 லட்சத்தை ராஜு தட்டித் சென்றிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் ராஜுவிற்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடம்- பவானி, நான்காவது இடம்- அமீர் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று தொடங்க இருக்கும் கிராண்ட் பினாலே பார்த்தால் தெரிந்துவிடும்.

Image

இன்று ஒளிபரப்பாக இருக்கும் இறுதி போட்டி :

மக்கள் அனைவரும் இன்று மாலை ஆரம்பிக்கப் போகும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜூ. இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தான் நடிகராக இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து இருக்கிறார்.

Advertisement