பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துள்ள பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரமாண்டமாக தொங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது.
அதோடு முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். மேலும், கடந்த ஒரு வாரமும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது. அதில் மெட்டி ஒலி சாந்தி, ஜனனி, ஜி பி முத்து கேப்டன் தலைவருக்கான போட்டியில் பங்கேற்று இருந்தார்கள். அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார்.
பின் அவர் வீட்டில் ஒவ்வொரு அணியினரும் என்ன வேலை? செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொடுத்து நேற்றைய நிகழ்ச்சி சிறப்பாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியில் கலந்துள்ள பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கமலஹாசனுக்கு 75 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
விஜே கதிரவன்:
இவர் விஜேவாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது இவருக்கு 27 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 18 முதல் 22 ஆயிரம்
அசல் கொலார்:
இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சென்னை கானாவை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து வித்தியாசமான ஃபாஸ்ட் பீட்டுடன் வெளியான இந்தப் பாடல் செம்ம ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவருக்கு 26 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 15 முதல் 17 ஆயிரம்.
ஆயிஷா:
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. அதிலும் இவர் நடித்த சத்யா சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 28 முதல் 30 ஆயிரம்
ஜனனி :
இவர் இலங்கை தமிழர். இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சினிமாவில் நடிப்பது தான் இவர் ஆசை. தற்போது இவருக்கு 21 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ஜி பி முத்து:
சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. இந்த சீசனிலேயே அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் இவர் தான். தற்போது இவருக்கு 41 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 15 முதல் 18 ஆயிரம்
தனலட்சுமி:
டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. தற்போது இவருக்கு 22 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.11 முதல் 20 ஆயிரம்
அசிம்:
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அசிம். இவர் கடைசியாக பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது இவருக்கு 32 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 22 முதல் 25 ஆயிரம்
விஜே மகேஸ்வரி:
இவர் சின்னத்திரையில் பல ஆண்டு காலமாக தொகுப்பாளராக திகழ்கிறார். அதோடு இவர் சீரியலிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவருக்கு 37 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 18 முதல் 23 ஆயிரம்
மணிகண்டன் ராஜேஷ்:
இவர் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆவார். அதோடு சீரியல்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது இவருக்கு 34 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 18 முதல் 24 ஆயிரம்
நிவாஷினி:
இவர் மாடல் அழகி ஆவார். தற்போது இவருக்கு 24 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 12 முதல் 18 ஆயிரம்
குயின்சி:
தற்போது இவருக்கு 21 வயது ஆகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 15 முதல் 20 ஆயிரம்
மெட்டி ஒலி சாந்தி:
இவர் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆவார். தற்போது இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ராபர்ட் மாஸ்டர் :
இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆவார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 25 முதல் 27 ஆயிரம்
ராம்:
தற்போது இவருக்கு 28 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 12 முதல் 15 ஆயிரம்
ரக்ஷிதா:
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷிதா. இவர் கடைசியாக இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது இவருக்கு 31 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 25 முதல் 28 ஆயிரம்
ஷெரினா:
இவர் ஒரு மாடல் ஆவார். இவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இவருக்கு 34 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 23 முதல் 25 ஆயிரம்
ஷிவின்கணேசன்:
இவர் ஒரு திருநங்கை ஆவார். தற்போது இவருக்கு 25 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 20 முதல் 25 ஆயிரம்
விக்ரமன்:
தற்போது இவருக்கு 38 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 15 முதல் 17 ஆயிரம்
அமுதவாணன்:
இவர் மிக பிரபலமான காமெடி நடிகர் ஆவார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். தற்போது இவருக்கு 39 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 23 முதல் 27 ஆயிரம்
ஏ டி கே:
தற்போது இவருக்கு 41 வயதாகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 16 முதல் 19 ஆயிரம்
மைனா நந்தினி:
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இவர் படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 20 முதல் 25 ஆயிரம்