பிக் பாஸ் ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6:
மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது முகங்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.
https://www.youtube.com/watch?v=ArrNW5Q2H6Y&t=28s
ஜனனி குறித்த தகவல்:
குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பிரப பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது.
ஜனனி-அமுதவாணன்:
நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியில் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.
https://www.youtube.com/watch?v=ozo2pa7bKvo
ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம்:
இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். அதோடு நிகழ்ச்சியில் ஜனனி பற்றி அறிந்த பலரும் ஜனனியின் குடும்பம், அவருடைய பின்னணி பற்றி எதுவுமே தெரியவில்லை. இவர் இலங்கையை சேர்ந்தவர் தவிர இவருடைய நண்பர்கள், குடும்பம் குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜனனியின் சொந்த வீடு குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இலங்கையில் உள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படத்தை தான் நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.




