லாஸ்லியாவை போல ஒரு இலங்கை Anchor, மலேசியாவை சேர்ந்த போட்டியாளர் – பிக் பாஸில் கலந்துகொள்ளும் புது முகங்கள்.

0
387
bigg
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-
biggboss6

இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நடன இயக்குனர் ராபர்ட், நடிகை ரக்ஷிதா, விசித்ரா, ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா, சோசியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார், நடிகை ஜாக்குலின், தீபா சங்கர், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர், அமுதவாணன், ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா என பல பேர் அடிபட்டு வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களில் இருந்தும் சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் குழு அறிவித்த உடனே எக்கச்சக்கமான பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதிலிருந்து சிலரை பிக் பாஸ் குழு பரிசீலனை செய்து தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த பட்டியலில் இருக்கும் சில பேரின் விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஷெரினா:

இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஒரு சூப்பர் மாடல் ஆவார். இவர் பார்ப்பதற்கு அப்படியே யாஷிகா ஆனந்த் போலவே இருக்கிறார். இவர் சினிமா படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றார்.

ஜனனி:

இவர் வெளிநாடு வாழ் தமிழர். இலங்கையில் இருந்து வருகிறார். இவர் அங்கு ஆங்கர் ஆக பணிபுரிந்து இருக்கிறார்.

ஏ.டி.கே:

இவர் மலேசியாவை சேர்ந்தவர்.

கடந்த ஐந்தாவது சீசனில் முதன் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்துவை பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த முறை சீசன் 6யிலும் சிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்து கொள்ள இருக்கிறார்.இப்படி பல புது முகங்கள் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்கள் தாக்குப் பிடிப்பார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

Advertisement