நாமினேஷனுக்கு வந்த மிக்சர் போட்டியாளர்கள் – தேர்ந்தெடுத்து இந்த வாரம் வெளியில் அனுப்பி இருக்கும் ரசிகர்கள்.

0
364
bigg
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து 40நாட்கள் கடந்த நிலையில் எப்போதும் போல இந்த வாரம் எலிமினேஷன் ஆக போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனனே ஜி.பி.முத்து, அசல் கோளாறு, மெட்டிஒலி சந்த, செரீனா, மகேஸ்வரி போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிடியேறிய நிலையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் யார் அடுத்த எலிமினேஷன் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் என்றாலே சண்டையும் சச்சரவும் இல்லாத சீசனே இல்லை என்று சொல்லலாம். ஆனால் கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடந்து வருகிறது. குறிப்பாக போட்டியாளர்களுக்கு இடையே ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதனை மேலும் விறுவிறுப்பாக்க போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராஜ அருங்காட்சியகம் டாஸ்க்கானது கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த டாஸ்கில் ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, படைத்தளபதி, ராஜகுரு, அரண்மனை காவலாளிகள் என போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமானது வழங்கப்பட்டது. மற்ற டாஸ்குகளை போல இந்த டாஸ்க்கிலும் பல சண்டைகள் வந்தன குறிப்பாக படைத்தளபதி அசீம் மற்றும் ராஜகுரு விக்ரமன் இருவருக்கும் பெரிய சண்டை ஏற்பட்டிருந்தது. அந்த பிரச்னை தனிந்த பின்னர் பிக் பாஸ் `சில போட்டியாளர்களுக்கு பொருட்களை திருடி கஜானாவை நிரப்பும் டாக்கை கொடுத்திருந்தார்.

அதிலும் அசீம் மற்றும் ஏடிகே இடையில் பெரிய சண்டை ஏற்ப்பட்டது. இப்படி சண்டை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் ராஜாவான ராபர்ட் மாஸ்டர் மற்றும் ராணியான ரட்சிதாவிற்கிடையே சில குயூட் காட்சிகளும் நடந்து கொடுத்தான் இருந்தது.தற்போது ராஜவம்சன் டாஸ்க்கானது முடிவடைந்த நிலையில் இந்த வாரம் யார்? எலிமினேஷன் என்ற கேள்வி போட்டியாளர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

தற்போது எலிமினேஷன் லிஸ்டில் தனலட்சிமி, நிவாஷினி, குய்ன்ஸி, கதிரவன், ஜனனி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசிம் உள்ளனர். இதில் பிக் பாஸ் ரசிகர்களை போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் வைத்து பார்த்தால் முதல் மூன்று இடங்களில் தனலட்சிமி, அசீம் , ஜனனி போன்றவர்களும்`கடைசி மூன்று இடங்களில் குய்ன்ஸி, ஆயிஷா, நிவாஷினி உள்ளனர்.இதனை வைத்து பார்க்கும் போது மற்ற எல்லா போட்டியாளர்களை விடவும் நிவாஷினி குறைவான ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்நிலையில் நிவாஷினி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கதிர் டாப் 3 இடத்தில் இருக்கிறார். மேலும் விரைவில் புதிதாக ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளரராக வீட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் முதலில் வெளியேறிய ஜி.பி.முத்து அல்லது அசல் கோளாறு மீண்டும் பிக் பாஸிற்குள் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே அசல் கோளாறு தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement