மக்கள் போட்டியாளர், ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம், இன்னும் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

0
199
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த ஒரு புதிய அப்டேட் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-
biggboss6

இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இதில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தனர். இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. பின் பிக் பாஸின் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் முதல் முதல் வாரத்தில் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது. மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா? அல்லது சிம்புவே தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகி இருந்தது .இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

அதாவது, இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும் ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதே சமயம் டிஸ்னி பிளஸ் ஸ்டார் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. பிக் பாஸ் அல்டிமேட்டை போலவே போட்டியாளர்கள் ஒரு நாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

Advertisement