போன வாரம் ஜனனி, இந்த வாரம் இவரா ? பிக் பாஸில் யாரும் எதிர்பாராத எலிமினேஷன். யார் தெரியுமா ?

0
314
dhana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கடைசி மாதத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்று தகவலானது தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளராக வெளியேறி வருகின்றனர். தற்போது மொத்தம் 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹசன் கூறுவதை போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியது நம்முடைய நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரசிகர்களின் வாக்குகளின் மூலம் மட்டுமே போட்டியாளர்கள் வெறியேறிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வாக்குகள் குறைவாக இருந்து வெளியேறுவார்கள் என்று நினைத்த போட்டியாளர்கள் இன்னமும் பிக் பாஸ் வீட்டில்தான் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

எதிர்பாராததை எதிர்பாருங்கள் :

அந்த வகையில் கடந்த வாரம் கூட குறைவான வாக்குகள் பெற்று மணிகண்டன் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் மணிகண்டன் முதலில் சேவ் ஆகவே எடிகே மற்றும் ஜனனி மீதம் இருந்தனர். இதிலும் எடிகே தான் வெளியேறப்போகிறார் என்றிருந்த நிலையில் திடீரென ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று இன்னமும் தெரியவில்லை.

அதற்கு முந்தய வாரம் கூட நன்றா விளையாடி வந்த ஆயிஷா வெளியேறியது விஜய் டிவியின் சதி என்றெல்லாம் ரசிகர்கள் குற்றம் சாட்டி’வந்தனர். மேலும் எப்போதும் பிக் பாஸில் இல்லாதது போன்று தற்போது திங்கள் முதல் வியாழன் இரவு வரையில் மட்டுமே ரசிகர்கள் வாக்குகள் அளிக்க முடியும் என்று சேனல் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் எதிர்பாராத ஒருவர் வெளியேறுவர் என்று தெரிகிறது.

-விளம்பரம்-

குறைவான வாக்குகள் பெற்றவர்கள் :

அந்த வகையில் தற்போது குறைவான வாக்குகள் பெற்று கடைசி மூன்று இடங்களில் மைனா நந்தினி, ஷியின் கணேஷ், தனலட்சிய என பலரும் இருந்து வருகின்றனர். இவர்களில் யார் வெளியேறினாலும் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறையும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் ஜனனி வெளியேறியதை போல மைனா நந்தினி வெளியேற்றப்படலாம்? என்று ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் எழுந்தாலும், மறுபுறம் அவர் விஜய் டிவியை சேர்ந்தவர் என்பதினால் காப்பாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெளியேறுவது யார் :

மேலும் மைனா நந்தினி இந்த வாரம் நடந்த டாஸ்கில் மிக சிறப்பாகவே விளையாடினார் அதுவும் அவர் செய்யும் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் சிலர் இந்த மைனா நந்தினி காமெடி என்ற பெயரில் கழுத்தை அறுப்பதினால் அவரே வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் தற்போது பெண் போட்டியாளர்களின் கண்டன்ட் கொடுத்து வருவது தனலட்சுமி தான். ஒருவேளை அவர் வெளியேறினால் அது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் செந்தேகமில்லை.

Advertisement