மீண்டும் ஒரு ஓபன் நாமினேஷன் – இந்த வாரம் நிக்சன் வெளியேறுவாரா இல்லையா?

0
540
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். 

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. இந்த வாரம் நிக்சன் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு ட்விஸ்டை கொடுத்துவிட்டது.

Advertisement