விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ். அதே போல இந்த வார நாமினேஷனில் விசித்ரா, ரவீனா, பூர்ணிமா, மணி, பிராவோ, அக்ஷயா, விக்ரம், கானா பாலா, ஆகிய 8 பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கில் இந்த வார கேப்டனான தினேஷ் பங்கு பெறவில்லை. மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க்கில் அனைவரும் பெரிதாக பங்கேற்கவில்லை என்று தினேஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஷ்ணு இவருக்கு ஏதாவது ஒரு கேரக்டரை கொடுங்கள் என்று கூறியிருந்தார். இதனால் தினேஷ் உங்கள் கேரக்டரை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறினார்.ஆனால், விஷ்ணு அவரை வாயா போயா என்று பேச ஆரம்பித்தார் சத்தம்போட்டார்.
பின்னர் இவர்கள் இருவருக்கும் இப்படியே வாக்குவாதம் நீண்டு கொண்டு செல்ல விஷ்ணு, தினேஷை நரி என்று கூற தினேஷ் பதிலுக்கு விஷ்ணுவை அமுல் பேபி என்றும் கூறியிருந்தார். மேலும், என்னிடம் வந்து ப்ரோமோ கன்டென்ட் ரெடி செய்யாதே என்று கூறிய தினேஷ் விஷ்ணுவை கன்டென்ட் பொறுக்கி என்றும் கூறினார். இதனால் கோபமடைந்த விஷ்ணு ஒரு கட்டத்தில் தன்னுடைய செருப்பை கழட்ட முயன்றார். பின்னர் அதை அப்படியே சமாளித்து மீண்டும் தினேஷிடம் சண்டையிட்டார்.
பின்னர் தான் இது தனக்கு கொடுத்த சீக்ரட் டாஸ்க் என்று தினேஷ் கூறினார். அதில் ‘ தான் எவ்வளவு ட்ரிகர் செய்தாலும் போட்டியாளர்கள் அவர்களின் கேரக்டர்களில் இருந்து மாறாமல் பேச வேண்டும் என்று பிக் பாஸ் தனக்கு டாஸ்க் கொடுத்ததாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இதே டாஸ்க் தொடரப்பட்டு இருக்கிறது. அதில் தினேஷிற்கு அக்ஷயா கேரக்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.