ஒரு கேப்டன் செய்ற வேலையா இது? டாஸ்கில் கூட தனது கேங்கிற்க்காக பித்தலாட்டம் செய்யும் பூர்ணிமா.

0
204
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க் மூலம் இந்த வார தலைவராக பூர்ணிமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் கேப்டன் பதவியை ஏற்றவுடன் யுகேந்திரன்,நிக்சன், அக்ஷயா,மணி,ஜோவிகா, பிரதீப் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. அதிலும் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த முறை ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள்.அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த யுகேந்திரன்,நிக்சன், அக்ஷயா,மணி,ஜோவிகா,பிரதீப்ஆகிய அனைவரும் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுவிட்டனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் football டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.. இதில் ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்த மணி வெற்றி பெற்றதால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டார் தான் வீட்டை துடைக்க வேண்டும் என்று கூறிவிட்டார் பிக் பாஸ். இப்படியாக நேற்றய நிகழ்ச்சி முடிய தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோல்டு ஸ்டாருக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இந்த வார கேப்டனான பூர்னிமா தனது நண்பர்களுக்கு ஆதரவாக விளையாடி பித்தலாட்டம் செய்து இருக்கிறார்.

Advertisement