விக்ரம் எஸ்கேப் ஆனது எல்லாம் மிராக்கள் – என்னது டைட்டில் வின்னர் தாகப்ட்டாரா?

0
419
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற போன வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் வீடு என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருந்தது. கடந்த வாரம் முழுதும் ஸ்டார்களுக்காக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அதிகப்படியான ஸ்டார்களை பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார்.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர். ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார்கள். இதனை தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார். பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம்.

-விளம்பரம்-

நாமினேஷன் பட்டியல்:

தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் மேலும் மூன்று Wild Card போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. அந்த வகையில் அனன்யா, விஜய் வர்மா, வினுஷா ஆகிய மூவர் உள்ளே நுழைய இருக்கின்றனர்.

இன்றைய ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோவில், விஷ்ணு- தினேஷ் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் விஷ்ணு, இவர்கள் போட்டோ ஓட்டை சிதற விட்டார்கள். இன்னும் நாலு ஐந்து பேர் வெளியே போக வேண்டியவர்கள் தான். விக்ரம் எல்லாம் எப்படி தப்பித்தான் என்றே தெரியவில்லை. இவர்களை வெளியே அனுப்பி அவர்களை உள்ளே வைத்து சுவாரசியமாக நிகழ்ச்சியை நடத்த பிக் பாஸ் ஏற்பாடு செய்திருக்கலாம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

Advertisement