விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இந்த சீசனில் முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பாவா செல்லதுரை தாமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்றது. அதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும், அனைவரும் எதிர்பார்த்த wild card போட்டியாளர்கள் நேற்றய நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுத்து இருந்தார்கள்.
அதன் படி கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.இந்த வாரமும் பூர்ணிமாவே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதோடு Wild card போட்டியாளராக நுழைந்த போட்டியாளர்களையே பிக் பாஸ் வீட்டார், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார்.
வைல்ட் காடு போட்டியாளர்கள் சென்றதில் இருந்து அவர்களுக்கும் ஏற்கனவே பிக் பாஸில் இருந்தவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்மால் பாசில் இருந்து விசித்ரா நடுவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த டாஸ்க் முடிந்த பின்னர் அர்ச்சனா, விசித்திராவிடம் நானும் தான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்னை ஏன் நடுவராக இருக்கிறீர்களா என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை என்று கேட்டிருந்தார்.
இதற்கு விசித்திரா அப்போது சொல்ல வேண்டியது தானே என்று கேட்டிருந்தார். இதற்கு அர்ச்சனா நீங்கள்தான் என்னிடம் கேட்கவே இல்லையே என்று சொல்லி இருந்தார். இதனால் விசித்ரா மற்றும் அர்ச்சனா விற்கு இடையே கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது இதனால் கடுப்பான விசித்திரா இனி நான் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கமாட்டேன் இவர்கள் எல்லோரும் என்னை டார்ச்சர் செய்கிறார்கள் என்று பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார்.
விசித்ரா விதியை மீறியதால் கொஞ்ச நேரம் கேஸ்ஸை கட் பண்ணி இருந்தார் பிக் பாஸ். இப்படியாக நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்து இருந்தது. இப்படியாக நேற்றய நிகழ்ச்சி முடிய தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் துவங்கி இருக்கிறது. அதில் விசித்ரா, மாயா, கூல் சுரேஷ் ஆகியோர் போட்டி போட்டுள்ளார்கள். இதில் எப்படியும் மாயாவை தான் கேப்டனாக ஆக்கப்போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.