இது பிக் பாஸ் ஹவுஸ்னு வச்சதுக்கு பதிலா மாயா பாஸ் ஹவுஸ்னு வச்சி இருக்கலாம் – அர்ச்சனா காட்டம்.

0
267
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 37 வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இது குறித்து சிலர் பிரதீப்க்கு ஆதரவாக பேசி இருந்தார். பிறகு கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்னபாரதி வந்த வேகத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார்.

நேற்றைய எபிசோட்:

பின் அவர் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா ஆகியோரை ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டார் பேசி வைத்துக்கொண்டு நாமினேஷன் செய்ததால் இனிமேல் நாமினிநேஷன் பற்றி யாரிடமும் பேசக்கூடாது, அப்படி மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கமல் கூறிஇருந்தார்.

-விளம்பரம்-

நாமினேட் பட்டியல்:

அதற்குப்பின் நேற்று நடந்த நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பின் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அர்ச்சனாவை டார்கெட் செய்து இருந்தார்கள். பின் அர்ச்சனா கொந்தளித்து கடுமையாக பேசி இருந்தார். அதேபோல் தினேஷும் சமைப்பது குறித்து சண்டை போட்டு இருந்தார்.

இன்றைய ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், மாயா ஸ்மால் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்டுகளுடைய டூத் பிரஷ் எடுத்து வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதனால் கடுப்பான விசித்திரா, அர்ச்சனா இருவரும் மாயா திட்டி தீர்த்து இருக்கின்றனர். மேலும், இது பிக் பாஸ்னு வச்சதுக்கு பதிலா மாயா பாஸ் ஹவுஸ்னு வச்சி இருக்கலாம் என்றும் புலம்பி இருக்கிறார் அர்ச்சனா.

Advertisement