விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மூன்றாம் வாரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பவா செல்லத்துரை வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸில் பிஸிக்கல் டாஸ்க் ஆரம்பம் ஆகி இருக்கிறது.
எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸில் பிஸிக்கல் டாஸ்க் ஆரம்பம் ஆகி இருந்தது. இந்த டாஸ்க் ஆரம்பம் ஆன சில நிமிடத்தில் நிக்சன் கண்ணாடி கதவை உடைத்தார். இதனால் பிரதீப் மற்றும் மாயாவிற்கு சிறு காயங்கள் கூட ஏற்பட்டது.
இதனால் டாஸ்க்கை சிறிது நேரம் நிறுத்திவைத்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து மீண்டும் இந்த டாஸ்க் துவங்கியது. அப்போது அனைவரும் ஆக்ரோசமுடன் ஆடினார்கள். அதிலும் டாஸ்க்கில் விஜய் வர்மா மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அதிலும் குறிப்பாக பிரதீப்பை எதோ WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் ஒருகணம் உறைந்து போனார்கள்.
ஆனால், பிரதீப் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் மீண்டும் விளையாட்டை தொடர்ந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அவன் என் கழுத்தை பிடித்தான். சரி, நீ அவ்ளோ புத்திசாளினா நானும் காட்றேன். என்னை நோண்டுனாங்க சரி நானும் ஜாலியா நோண்டுறேன் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விஜய் வர்மாவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே விஜய் வர்மா ஒரு yellow card வாங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் கமல் கண்டிப்பாக அவருக்கு மேலும் ஒரு Yellow Cardஐ வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.இப்படி ஒரு நிலையில் Repayment டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இதில் யுகேந்திரன்,ரவீனா,மணி ஆகியோர் விளையாடி தோற்றதால் பிக் பாஸ் வீட்டார் வீட்டில் சமைக்கும் உணவுகளை உன்னக் கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார் பிக் பாஸ்.