நானும் மனுஷி தானே முதல் முறையாக கண்ணீர் விட்டு அழுத மாயா – யார் காரணம் தெரியுமா?

0
207
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க் மூலம் இந்த வார தலைவராக பூர்ணிமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் கேப்டன் பதவியை ஏற்றவுடன் யுகேந்திரன்,நிக்சன், அக்ஷயா,மணி,ஜோவிகா, பிரதீப் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த வாரம் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இந்த முறை ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த யுகேந்திரன்,நிக்சன், அக்ஷயா,மணி,ஜோவிகா,பிரதீப்ஆகிய அனைவரும் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுவிட்டனர். நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு ஸ்டார்களுக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது விஷ்ணு மற்றும் அக்ஷயாவிற்கு சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அக்ஷயாவை வாடி போடி என்று ஒருமையில் பேசினார் விஷ்ணு.

இதை கேட்கப்போன நிக்சன் மற்றும் விஷ்ணுவிற்கும் கூட சண்டை ஏற்பட்டது. இறுதியில் இந்த டாஸ்கில் அக்ஷயா வெற்றி பெற்றதால் ஜோவிகாவிற்கு இரண்டு ஸ்டார்கள் கிடைத்தது. இப்படியாக நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா, விக்ரமிடம் விசித்ரா செய்தது குறித்து புலம்பியதோடு நானும் மனுஷன் தானே என்று முதன்முறையாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Advertisement