ஒட்டு மொத்த Bully Gangஐயும் சிதறடித்து பட்டத்தை வென்ற அர்ச்சனா – பிக் பாஸ் வரலாற்றில் அவர் படைத்துள்ள புதிய சாதனை.

0
457
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். நாளை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் அழுது கொண்டே இருந்தார். இதனாலே இவரை போட்டியாளர்கள் பலருமே விமர்சித்தும் கிண்டல் செய்தும் இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

முதன்முதலாக அர்ச்சனா, கோபம் தாங்காமல் மாயா புள்ளி கேங்க்குடன் தான் சண்டை போட ஆரம்பித்தார். மொத்த வீடுமே அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பும் போது அர்ச்சனா தைரியமாக எதிர்த்து நின்று பேசி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. பின் பிரதீப்பிற்கு எதிராக பலருமே குரல் கொடுத்த போது அர்ச்சனா அவருக்கு ஆதரவாக நின்றிருந்தார். ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பும்போதும் கூட பிரதீப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அர்ச்சனா கேட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் அர்ச்சனா:

இதனாலே பிரதிப் ரசிகர்களும் அர்ச்சனாவிற்கு ஆதரவாக இருந்தார்கள். அதற்குப்பின் எல்லா விளையாட்டிலும் அர்ச்சனா திறமையாக விளையாடி வந்தார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்களும் அர்ச்சனாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். குறிப்பாக, மாயா கேங்க் அர்ச்சனாவை தோற்கடிக்க பல சதிவேலைகள் செய்திருந்தார்கள். அது எல்லாம் முறியடித்து அர்ச்சனா விளையாடி வந்தார். மேலும், நிக்ஸன்- அர்ச்சனா இடையே நடந்த தகராறில் மிக மோசமாக நிக்சன் பேசியிருந்தார்.

-விளம்பரம்-

டைட்டில் வென்றவர்:

இதற்கு அர்ச்சனாவிற்கு தான் ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் அர்ச்சனா உடைய செயலால் அவருடைய ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டே இருந்தது. தற்போது இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி நெருங்கி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த படி அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். இவரை தொடர்ந்து மணிக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கிறது.

அர்ச்சனா விற்கு கிடைத்த வாக்கு :

இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் போட்டியளராக நுழைந்து டைட்டில் பட்டதை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா தட்டிச் சென்றிருக்கிறார்.இதுவரை இவருக்கு 942413 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக மணிக்கு 887639 வாக்குக்கள் பதிவாகி இருக்கிறது.

Advertisement