தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம்.
பிக் பாஸ் 7:
தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் இருக்கிறார்கள். இதில் நேற்று மிட் வீக் எவிஷனில் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார். மேலும், இரண்டு நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. நாளை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறுகிறது.
டைட்டில் வென்றவர்:
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த சீசனில் வெற்றியாளர் பட்டதை அர்ச்சனா தட்டி சென்றிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக 28ஆம் நாளில் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளில் இருந்து இப்போது வரை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி கொண்டு தான் இருக்கிறது.
இரண்டாம் மூன்றாம் இடம் யாருக்கு :
இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணிச்சந்திரா பிடித்திருக்கிறார். இவர் முதல் நாளில் இருந்து இறுதி வரை வந்து இருக்கிறார்.
மூன்றாவது இடத்தை தினேஷ் பிடித்திருக்கிறார். இவர் 28 ஆம் நாள் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தார்.
நான்காம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார். இவர் முதல் நாளில் இருந்து இறுதி வரை வந்து இருக்கிறார்.
ஐந்தாம் இடத்தை மாயா பிடித்திருக்கிறார். இவர் முதல் நாளில் இருந்து இறுதி வரை வந்து இருக்கிறார்.
அர்ச்சனா படைக்க இருக்கும் சாதனை :
இதில் அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்று இருப்பதும் மணி சர்மாவிற்கு இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்று இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் பிக் பாஸ் வரலாற்றிலேயே Wild Card போட்டியாளர் ஒருவர் பட்டத்தை வென்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை செய்து இருக்கிறார் அர்ச்சனா. அதே சமயம் மூன்றாம் இடம் யாருக்கு கிடைத்தது மாயாவிற்கு முன்னாள் விஷ்ணு வெளியேறினாரா என்பது இன்னும் உறுதியாக வில்லை.