எல்லோரும் கார்னர் செய்யுறாங்க, சிங்கிள் மதர் – பிக் பாஸ் மஞ்சரியின் தங்கை சொன்ன விஷயம்

0
177
- Advertisement -

பிக் பாஸ் மஞ்சரி குறித்து அவரின் தங்கை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் முடிந்து 65 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் வெடித்தது. இந்த டாஸ்கில் ரஞ்சித், பவித்ரா, தீபக், மஞ்சரி ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகி இருந்தார்கள். பின் கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

மஞ்சரி குறித்த தகவல்:

கடந்த வாரம் நடந்த நாமினேசன் பிரீ பாஸ் டாஸ்கில் மஞ்சரி வெற்றி பெற்றதால் இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து தப்பித்து விட்டார். அது மட்டும் கடந்த சில தினங்களாகவே நிகழ்ச்சியில் மஞ்சரியினுடைய பெயர் தான் அதிகமாக அடிபட்டு வந்தது. குறிப்பாக, சௌந்தர்யா, ஜாக்குலின் என சில போட்டியாளர்களுடன் மஞ்சரிக்கு கருத்து வாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மஞ்சரியை டார்கெட் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றிருந்தது. அதோடு அதற்கு விஜய் சேதுபதியும் தக்க பதிலடி கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

மஞ்சரி தங்கை பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மஞ்சரியின் சகோதரி யாகவி, எங்கள் வீட்டுக்கு மூத்த பொண்ணு அக்கா தான். எங்க அம்மா ஸ்கூல் டீச்சர். அப்பாவுக்கும் தமிழ் மேல ஆர்வம் அதிகம். அம்மா, அப்பாவோட இந்த ஆர்வம் தான் அக்காவையும் படிக்கும்போதே கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி என்று செய்ய வைத்தது. அதனால் தான் அக்கா, பிடெக் ஐடி படித்தாலுமே மீடியா பக்கம் வந்தார். ஆரம்பத்தில் கேப்டன் நியூஸ் சேனலில் நியூஸ் ரீடராக கொஞ்ச நாள் வேலை பார்த்தார். பின் ஐடி பக்கம் போனார். ஆனாலும், மீடியா ஆர்வத்தினால் மறுபடியும் இவர் டிவி பக்கம் வந்துவிட்டார். நிறைய பட்டிமன்றங்களில் பேசி இருக்கிறார்.

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

அதனால் தான் இவருக்கு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது. அதே போல் தான் தற்போது இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு அமைந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் அவரை சிலர் கார்னர் செய்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் இயல்பாகவே அவரிடம் ஒரு பொறுப்புணர்வும், தைரியமும் இருக்கிறது. அதனால் தான் விவாகரத்து ஆகியும் சிங்கிள் மதரா குழந்தையை வளர்த்துக் கொண்டு வருகிறார். இதை சிலர் திமிர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிலும் இதே இயல்புடன் தான் இருக்கிறார். எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்கிற பக்குவம் அக்காவிடம் இருக்கிறது. அதனால் நிகழ்ச்சி முடியும் வரைக்கும் பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement