பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 8:
இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த சீசனில் நடிகர் அருண், சீரியல் நடிகர் தீபக், வினோத் பாபு, பவித்ரா ஜனனி, அர்னவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
இவர்களை தொடர்ந்து மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, ஜோயா, குரேஷி, டிடிஎஃப் வாசன், பிரீத்தி முகுந்தன் என்று பல பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் செல்வார்கள் என்று தெரியவில்லை. அதோடு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், நடிகர் ரஞ்சித் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:
இவர் சினிமா, சீரியல் என்று பிஸியாக இருந்தாலுமே பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இவர் இயக்கி நடித்திருந்த கவுண்டம்பாளையம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக சச்சிதா நடித்திருந்தார். மகாராஜா படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலுமே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்.

பிக் பாஸ் அப்டேட்:
அதன் பின் நடிகர் ரியாஸ் கான் பெயர் அடிபடுகிறது. இவருடைய மகன் சாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்தது. இவரின் பெயரும் முதல் சீசனில் இருந்தே அடிபட்டு கொண்டு வருகிறது. தற்போது இவர் 8வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொகுப்பாளர் ஜெகனும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் கடைசியாக கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி சுனிதா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இவர்களில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






