கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் ஏழு வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாகவும், பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது.
மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதோடு சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரோமோ சூட் பாண்டிச்சேரியில் நடத்தி இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் 8:
இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை தான் சேனல் தரப்பில் வெளியாகி இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, நடிகர் ரஞ்சித், ஜோயா, குரேஷி, அருண் பாரதி, ஜெகன், டிடிஎஃப் வாசன், ரியாஸ் கான், பிரீத்தி முகுந்தன் என்று பல பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இதில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் செல்வார்கள் என்று தெரியவில்லை.
போட்டியாளர்கள் குறித்த தகவல்:
இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் உறுதி பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் பாரதிகண்ணம்மா நடிகர் அருண், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகர் தீபக், ரவீந்தர், வினோத் பாபு-பவித்ரா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இது தவிர இந்த நிகழ்ச்சியில் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்-அன்ஸிதா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அர்னவ்-திவ்யா உடைய விவகாரம் அனைவரும் அறிந்ததே. போலீஸ் கோர்ட் வரை இவர்களின் விவகாரம் சென்றுவிட்டது. இருந்தும் அர்னவ் தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடித்து வந்தார்.
பிக் பாஸ் 8 அப்டேட்:
சமீபத்தில் தான் இந்த சீரியலும் முடிவடைந்தது. இந்த சீரியலின் மூலம் அர்னவ்-அன்ஸிதா ஜோடி மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தாவும் கலந்து கொள்ள இருக்கிறார். பின் தொகுப்பாளராக அறிமுகமாகி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா நடிகர் பரினா கலந்து கொள்ள இருக்கிறார். சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களான காத்து கருப்பு கலை, பிசியோதெரபிஸ்ட் திவாகர் ஆகிய இருவரில் ஒருவர் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.