பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ? அவரோட உண்மையான பெயர் இதுவா ? உண்மை என்ன ?

0
3417
akshara
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 15 நாட்கள் முடிவடைந்து உள்ளது. கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார்கள். அதே போல் போட்டியாளர்களும் தினுசு தினுசாக உள்ளார்கள். வழக்கம் போல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு, மூன்று நாட்களிலேயே நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல் நதியா சாங்க் முதல் எலிமினேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டார்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சோசியல் மீடியாவில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அக்ஷரா. இவர் மாடல் ஆவார். இவர் சில விளம்பரங்களில் கூட நடித்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இவர் 2013ஆம் ஆண்டு கேரளாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அக்ஷராவின் உண்மையான பெயர் ராபியா சுதாகர் எனவும், தங்கம் கடத்தலில் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் இவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது இவர் மைதிலி என்பவர் மீது குற்றம் சுமத்தி அந்த வழக்கில் இருந்து விடுபட்டதாகவும், விடுபட்ட பிறகு இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய கெட்டப்பை மாற்றி விட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

ஆனால், இது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சீசனில் பவானிக்கு பிறகு ரசிகர் கூட்டம் இருப்பது இவருக்கு தான். இந்த நிலைமையில் இவரை பற்றி இப்படி ஒரு செய்தி வந்து இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இதனால் பிக்பாஸ் வீட்டிலும், மக்கள் மத்தியிலும் அக்ஷரா ரெட்டிக்கு நல்ல பெயர் கிடைக்குமா என்பது சந்தேகமான ஒன்றாக உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா ரெட்டியின் நிலைமை என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement