ஏற்கனவே விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் 13 பேரில் இரண்டாம் இடம் பிடித்துள்ள அக்ஷரா (அட, சனம் கூட இருக்கார் பாருங்க)

0
28876
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 10 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புதுமுக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷரா தான்.

-விளம்பரம்-

அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு. இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் தற்போது கடந்து வந்த பாதை டாஸ்க் தான் சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கடந்து வந்த பாதையை கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஆறுதல் கூறி மேலும் போட்டியாளரை அழ வைத்த அட்வைஸ் அபிஷேக்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய அக்ஷரா, சிறு வயது முதலே தனது அம்மாவும், அண்ணனும் பொத்தி பொத்தி பார்த்துக்கொண்டதாகவும் கூறி இருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்போர்ட் சோணை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், இதே நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சனம் ஷெட்டியை கூட கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதைப்பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் அவர் எதுவுமே சொல்லவில்லை.

-விளம்பரம்-
Advertisement